சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. ஆனால், தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழு, தேர்தல் அறிக்கையைத் தயாரித்து கட்சியின் பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு வழங்கிவிட்டார்கள். இந்தத் தேர்தல் அறிக்கை மேலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா அதை மேலும் செழுமைப்படுத்தி வருகிறாராம். தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுத்த பின்னர் அச்சுக்கு அனுப்பிவைக்கப்படும். இந்த பணிகள் எல்லாம் விரைவாக நடைபெறும் என்பதால் அதிமுக தேர்தல் அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகும் என்று தெரிகிறது.
அதிமுக தேர்தல் அறிக்கை எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம்
By Balaji
|
Published on 23 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








