அதிமுக ஆட்சியில் விலைவாசிதான் ஏற்றம் பெற்றது: விஜயகாந்த்

By Balaji

|

Published on 19 Apr 2016, 12:00 AM

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து பேசிய விஜயகாந்த், ‘இந்த தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். திமுக-வும் அதிமுக-வும் தோல்வி அடையும். எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சொல்லாத பல திட்டங்களை நிறைவேற்றுவோம். அதிமுக ஆட்சியில் மாநிலம் ஏற்றம் பெற்றுவிட்டதாகக் கூறுகிறார்கள். அதிமுக ஆட்சியில் விலைவாசிதான் ஏற்றம் பெற்றுள்ளது. தமிழக மக்களை நெருக்கடியில் நிற்க வைத்ததுதான் ஜெயலலிதா அரசின் சாதனை. மதுவிலக்கு குறித்து திமுக-வும் அதிமுக-வும் பேசுவது மக்களை ஏமாற்றும் நாடகம்’ என்று கூறினார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel