ரெண்டு அணியுமே ஸ்லீப்பர் செல் தாங்க! : அப்டேட் குமாரு

By Balaji

|

Published on 19 Aug 2017, 12:00 AM

வறட்சி நிவாரணம் தாங்க, வரியை தள்ளுபடி பண்ணுங்கன்னு விவசாயிகள் எவ்வளவு தூரம் போராடனுமோ அவ்வளவு தூரம் போராடிகிட்டு இருக்காங்க. எதையுமே காதுல வாங்காத ஈ.பி.எஸ் திருவாரூர் போய் எம்.ஜி.ஆர். நடிச்ச விவசாயி படம் 100 நாள் ஓடி சாதனை புரிஞ்சதுன்னு பேசிகிட்டு இருக்காரு. அணிகள் இணையுங்க இல்ல இணையாம போங்க எங்க கோரிக்கைகளை கேளுங்கன்னு சி.எம்.க்கு கருப்புகொடி காண்பிச்சு போராட்டம் நடத்திருக்காங்க விவசாயிகள். ஆனா என்ன நடந்தாலும் நம்ம சி.எம். முகத்துல இருக்குற அந்த சிரிப்பு மட்டும் மாறாமல் அப்படியே இருக்குங்க. இம்சை அரசன் படத்தில் வடிவேல் எதிரி நாட்டு மன்னனிடம் சிரித்தபடியே ‘அதான் மன்னா..’ என்று நிப்பாரே அது மாதிரிதாங்க. எனக்கென்னமோ இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் பணியை ஷங்கர் கொஞ்சம் நாள் தள்ளிப் போடலாம்னு தோனுது. உங்களுக்கு? ரொம்ப யோசிக்காம அப்டேட்ட பாருங்க.

**Bala Ji J**

ADVERTISEMENT

இரு அணிகளிலும் ஸ்லீபர் செல்ஸ் இருக்கிறார்கள்,.. டிடிவி

சார் அந்த இரண்டு அணியுமே உங்களுக்கு எதிரான ஸ்லீப்பர் செல்ஸ் சார்……

ADVERTISEMENT

ஐய்யோ ஐய்யோ

**Prabakar Kappikulam**

ADVERTISEMENT

எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

கூவத்தூர்ல 6 கோடி, குஜராத்துல 16 கோடி. அதெல்லாம் கண்ணு முன்னால வந்துபோகுமா இல்லையா..

**vishnut**

வாழ்க்கையில் சோகங்கள்

அடைமழையா விழுந்தாலும்,

ஆலங்கட்டி மழையா விழுந்தாலும் சரி சும்மா எருமமாட்ல மழை பேஞ்சா மாதிரி அசையாம நிக்க கத்துக்கணும்

**Baashhu**

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கோபப்பட்ட கமல்ஹாசன்

– கமலுக்கும் டாஸ்க்லாம் இருக்கு போல.

**vishnut87**

எங்கோ போய் சம்பாதித்து பணத்தையெல்லாம் கொட்டி வீடு கட்டி,வசிக்க முடியாம போட்டோல பார்த்துட்டு உட்காந்து இக்குறது தான் வெளிநாட்டு வாழ்க்கை

**Aruns212**

‘நான் பெரியவன்’ என்று சொல்வதற்கு ஏற்படும் போட்டி,’நான் வயதானவன்’ என்று சொல்வதற்கு ஏற்படுவதில்லை.

**Aruns212**

பெருவாரியான ‘வாக்’குகள் வித்தியாசத்தில் தான் தொப்பை தோற்கடிக்கப்படுகிறது.

**azam_twitz**

தலைகனத்தில் ஆடிய ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் போன்றவைகள் முடிவுக்கு வரும்பொழுது ஒருசிலர் தத்துவ ஞானிகள் போல் பேசத் தொடங்கி விடுகிறார்கள் .

**yugarajesh2**

தேர்தல் பிரச்சாரத்தின் போது ரசிகரை கன்னத்தில் அறைந்த நடிகர் பாலகிருஷ்ணாவால் பரபரப்பு

@இவரு ஆந்திராவோட ‘கேப்டன்’ போல..!!

**Endhirapulavan**

அதிமுகவுக்கு இதற்கு முன்னரே பல சோதனைகளைச் சந்தித்த அனுபவம் உண்டு:செல்லூர்ராஜு

நீங்க கட்சியில இருக்கறத விடவா பெரிய சோதனை வந்துறப்போவுது?

**mekalapugazh**

ஆறுதல் சொல்ல ஆளில்லாதபோது..

அழுகை அந்த வேலையைச் செய்துவிடுகிறது..

**mekalapugazh**

‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’

மொழிபெயர்ப்பு- ‘உள்ளே வராதே’

**சி.பி.செந்தில்குமார்‏**

அதிமுகவில் பிளவு என்பதே கிடையாது: மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

@ஆமா,களவுதான் இருக்கும் அதுவும் கூட்டு்க்களவு

**chandra_kalaS**

அனைத்து மகிழ்ச்சிக்கு பின்னாலும் நாம் பட்ட துன்பங்கள் உறங்கி கொண்டிருக்கிறது..!!

**HAJAMYDEENNKS**

குழந்தைகளை பொறுத்தவரை சனி, ஞாயிறு என்பது சேட்டைகளுக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் நாள்…!

**மன்னை முத்துக்குமார்**

பேனாவின் மூடியை திறந்து தருவது

அன்பிற்காக அல்ல..

“ திரும்ப வந்து சேர வேண்டும்”

என்பதற்காகத் தான்

**HAJAMYDEENNKS**

கமலுக்கு அரசியல் தெரியாது – எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா இறக்கும்வரை உங்களையே யாருக்கும் தெரியாது…!

**மெத்த வீட்டான்‏**

தனக்கு கிடைத்ததை உடனே அடுத்தவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறார்கள் என்றால் அது வாட்ஸ்அப் மெசெஜாக மட்டுமாகத்தான் இருக்கும்… !

**kumarfaculty**

பார்க்கும் கொசுக்களில் எல்லாம் நந்தலாலா ! டெங்கு பயம் தெரியுதடா நந்தலாலா!!

**கருப்பு கருணா**

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கர்நாடக அரசு புதிய அணைகளை கட்டலாம்.

-உச்ச நீதிமன்றம்

ஒரு ஆத்துல மேல்பகுதியில அணை கட்டுனா கடைமடை பகுதிகள் கண்டிப்பா பாதிக்கும்ன்னு எங்கூர்ல இருக்குற கோவணம் கட்டுன சாதாரண சம்சாரிக்கே தெரியும்…வெள்ளையும் சொள்ளையுமா கோட்டுசூட்டு போட்டுக்கிட்டு என்னாதான் தீர்ப்பு சொல்றீங்களோ போங்க..!

-லாக் ஆஃப்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel