தமிழக மீன்வர்களுக்கு இலங்கை அமைச்சர் அழைப்பு!

Published On:

| By Balaji

கச்சத்தீவு ஆலய விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க வருமாறு இலங்கை அமைச்சர் ஹர்ஷ டி சில்வா அழைப்பு விடுத்துள்ளார். மேலும், சமீபத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சுடு சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கை அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறுகையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் கச்சத்தீவு ஆலய விழாவை எந்தவிதத்திலும் பாதிக்காது.கச்சத்தீவு திருவிழாவிற்கு, தமிழக மீனவர்கள் வர இலங்கை கடற்படை சிறந்த ஏற்பாடுகள் செய்துள்ளது. இருநாட்டு மீனவ பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பது அவசியம். திருவிழாவில் சிறப்பாக நடத்த இலங்கை கடற்படையினர் ஒத்துழைப்பு தருவார்கள். துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என கடற்படை கூறுகிறது. பிழை ஏற்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தயாராக உள்ளது. தமிழக மீனவர் சுடப்பட்டது தொடர்பாக முழு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் நடக்கும் இருநாட்டு பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படும் என நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.,”

ADVERTISEMENT

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share