நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, தமிழக ஆளுநர் ரோசைய்யா, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாநகராட்சி மேயர் கணபதி ராஜ்குமார், கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.அமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இங்கு பயிற்சி பெற்ற இந்தியா உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பட்டங்களை வழங்கினார்.
இதையடுத்து பேசிய அவர், ராணுவ கல்லூரியில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் நாட்டை பாதுகாப்பதுடன் மற்ற நாடுகளுடன் நட்புடன் இருக்க வேண்டும் என்றும் முப்படைகளும் ஒன்றுபட்டு செயல்பட்டதால் தான் கடந்த 1971 ம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.
விழாவில் ஜனாதிபதிக்கு ராணுவ பயிற்சி கல்லூரி சார்பில் கவுரவ பட்டயம் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. கவர்னர் ரோசய்யாவிற்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. விழா முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் பிரணாப் முகர்ஜி கோவை வந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் மாலை 4.45 மணி அளவில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
