விஜய்யை மு.க.ஸ்டாலினாக மாற்றிய X மொழிபெயர்ப்பு… மோடி நிகழ்ச்சி பதிவில் ‘Show Translation’ மாயம்!

Published On:

| By Mathi

Vijay-X page-MK Stalin

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை மு.க.ஸ்டாலின் என X தளம் தவறாக மொழிபெயர்த்தது சமூக வலைதளங்களில் சர்ச்சையான நிலையில், இன்று பிரதமர் மோடி தொடர்பான முதல்வர் அலுவலகப் பதிவில் ‘Show Translation’ வசதி காணப்படாதது கவனம் பெற்றுள்ளது.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை நேற்று (அக்டோபர் 10-ந் தேதி) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சென்னையில் சந்தித்துப் பேசினார்.

ADVERTISEMENT

இந்தச் சந்திப்பு தொடர்பாக தமிழக முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ X பக்கமான @CMOTamilnadu-வில் விஜய், ராகுல் காந்தி இருவரும் ஒன்றாக இருக்கும் படத்துடன் பதிவு வெளியிடப்பட்டது.

அந்தப் பதிவில், ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (10.10.2026) மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் சந்தித்துப் பேசினார்’ என்று தமிழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்தப் பதிவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் படிப்பதற்கான ‘Show Translation’ என்ற வசதி இடம்பெற்றிருந்தது.

அதை கிளிக் செய்தபோதுதான் அதிர்ச்சியான மொழிபெயர்ப்பு வெளியானது.

ADVERTISEMENT

Today (10.10.2026), the Hon’ble Leader of the Opposition in the Lok Sabha, Mr. Rahul Gandhi, met and spoke with the Hon’ble Tamil Nadu Chief Minister Thiru. M. K. Stalin.
#CMJosephVijay

அதாவது, தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை ராகுல் காந்தி சந்தித்தார் என்ற தமிழ் பதிவை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ராகுல் காந்தி சந்தித்ததாக X தளம் தவறாக மொழிபெயர்த்திருந்தது. குறிப்பாக, ஆங்கில மொழிபெயர்ப்பில் ‘Tamil Nadu Chief Minister Thiru. M. K. Stalin’ என்று தெளிவாக இடம்பெற்றிருந்தது.

ஒரிஜனல் தமிழ் பதிவிலும் போட்டோவிலும் விஜய் இருந்த நிலையில், X தளத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில் மட்டும் மு.க.ஸ்டாலின் பெயர் இடம்பெற்றிருந்தது.

இந்தத் தவறான மொழிபெயர்ப்பை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்தனர். தமிழக முதல்வரின் பெயரையே X தளம் தவறாக மொழிபெயர்ப்பதா என விமர்சனங்களும் எழுந்தன.

இந்த நிலையில், இன்று (அக்டோபர் 11-ந் தேதி) பிரதமர் மோடி சென்னை வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.

இது தொடர்பாகவும் தமிழக முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் தமிழில் பதிவு வெளியிடப்பட்டது.

ஆனால் இந்தப் பதிவில் நேற்று இருந்ததைப் போல ‘Show Translation’ என்ற வசதி காணப்படவில்லை.

நேற்று ராகுல் காந்தி சந்திப்பு தொடர்பான பதிவில் ‘Show Translation’ என்பதை கிளிக் செய்தபோது விஜய்யின் பெயர் ஸ்டாலின் என்று தவறாக வந்தது. இன்று மோடி நிகழ்ச்சி தொடர்பான பதிவில் அந்த வசதியே காணப்படாதது கவனம் பெற்றுள்ளது.

மேலும், தற்போது ராகுல் காந்தி–விஜய் சந்திப்பு தொடர்பான பழைய பதிவில் ‘Show Translation’ என்பதை கிளிக் செய்தாலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றே ஆங்கிலத்தில் காட்டுகிறது. அதாவது, சர்ச்சையான அந்தத் தவறான மொழிபெயர்ப்பு இப்போதும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share