சென்னையில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் “NEXT PM VIJAY” என்கிற பதாகைகளை தவெக தொண்டர்கள் காட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை ஐஐடியில் இன்று (அக்டோபர் 11-ந் தேதி) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, விழா அரங்கில் அமர்ந்திருந்த தவெக தொண்டர்களில் சிலர், ‘NEXT PM VIJAY’ என்ற வாசகம் இடம்பெற்ற பதாகைகளை உயர்த்திக் காட்டினர். இந்தப் பதாகைகளில் முதல்வர் விஜய்யின் படமும் இடம்பெற்றிருந்தது.
பிரதமர் மோடி பங்கேற்ற மத்திய அரசு நிகழ்ச்சியிலேயே விஜய்யை அடுத்த பிரதமர் என்று குறிப்பிடும் பதாகைகள் காட்டப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
