தமிழ்நாட்டிற்கு ரூ.13,000 கோடி மதிப்பு திட்டங்கள்.. மோடி விஜய் கூட்டாக திறந்து வைப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மைதானத்தில் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும்,நிறைவடைந்த திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்

ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் விஜய்யும் இன்று காலை போரூர் – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தனர்.

ADVERTISEMENT

பின்னர் சென்னை ஐஐடி வளாகத்தில் இயங்கி வரும் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள அதிநவீன ஆராய்ச்சி வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை நேரில் பார்வையிட்டார். பொறியியல் மற்றும் நரம்பியல் அறிவியலை இணைத்து மனித மூளையின் கட்டமைப்புகளை நுணுக்கமாக ஆராயும் இம்மையத்தின் செயல்பாடுகளை விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து ஐஐடி வளாகத்தில் நடந்த விழாவில் ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி விஜய்யுடன் இணைந்து தொடங்கி வைத்தார். அப்போது தமிழக ஆளுநர் அர்லேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ADVERTISEMENT

பின்னர் சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். குறிப்பாக, ரூ.3,700 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். சுமார் ரூ.750 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, புனரமைக்கப்பட்ட 5 ரயில் நிலையங்களைத் திறந்து வைத்தார். அப்போது பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜய்யும் இணைந்து திட்டங்களைத் தொடங்கி வைத்தனர்.

ஆளுநர் ஆர்.என். அர்லேகர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ADVERTISEMENT

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share