மோடியின் பாதுகாப்பு வாகனத்தில் ஏறிய விஜய்- அடுத்து என்ன நடந்தது?

Published On:

| By Mathi

CM Vijay-Modi-Car

சென்னையில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனத்தில் தமிழக முதல்வர் விஜய் (Vijay) தவறுதலாக ஏறி அமர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று (அக்டோபர் 11-ந் தேதி) சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை முதல்வர் விஜய் வரவேற்றார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பிரதமர் மோடியும் முதல்வர் விஜய்யும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.

இந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்த முதல்வர் விஜய், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கருப்பு நிற பாதுகாப்பு வாகனத்தில் ஏறினார். ஆனால், அது முதல்வர் விஜய்க்காக நிறுத்தப்பட்டிருந்த கார் அல்ல. பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனம்.

ADVERTISEMENT

இதைக் கவனித்த பாதுகாப்பு அலுவலர்கள், அது பிரதமரின் பாதுகாப்பு வாகனம் என்பதையும் முதல்வருக்கான கார் வேறு இடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதையும் தெரிவித்தனர்.

இதையடுத்து முதல்வர் விஜய் அந்த வாகனத்திலிருந்து இறங்கி, தனக்காக நிறுத்தப்பட்டிருந்த காரை நோக்கிச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share