- எஸ்.வி.ராஜதுரை
டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கப்பட்ட மாணவர், இளைஞர் போராட்டம் நாடெங்கிலும் பரவி வருவதையும், அப்போராட்டம் பற்றி மோடி அரசாங்கமும் அதன் ஆதரவு ஊடகங்களும் பொய்களைப் புனைவதைப் போலவே, கடந்த ஒரு மாதமாக பிரான்சில் கல்வியிலும் கல்வி நிறுவனங்களிலும் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று பிரெஞ்சு மாணவர்கள் நடத்திவரும் போராட்டத்தை பிரெஞ்சு அரசாங்கம் கடுமையாக ஒடுக்கி வருகிறது. ஆதிக்க சக்திகளின் ஊடகங்களும் மாணவர்களின் நியாயமான போராட்டத்தின் மீது அவதூறுகளை சுமத்தி வருகின்றன.


அக்டோபர் 6, செவ்வாய்க்கிழமை அன்று, பிரான்சின் பல நகரங்களில் உயிரோட்டமான வெகுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நாட்டின் ஆறு முக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்புகளில் ஐந்து, தீவிரமடைந்து வரும் பள்ளி மாணவர் இயக்கத்திற்கு ஆதரவாக அணிதிரண்டன. மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள, பல ஆண்டுகளாகப் பள்ளி நிதிநிலையில் செய்யப்பட்ட வெட்டுக்களுக்கு எதிரான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சி, கொடூரமான காவல்துறை வன்முறை மற்றும் அரசின் பீதிக்கு மத்தியிலும் தொடர்ந்து வேகம் பெற்று வருகிறது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த முந்தைய இதே போன்ற இயக்கத்தை விட, இந்த இயக்கத்தில் மிக அதிகமான உயர்நிலைப் பள்ளிகள் ஈடுபட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகளும் (15 முதல் 18 வயது வரை) மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகளும் (11 முதல் 15 வயது வரை) முற்றுகையிடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களில் முப்பது பல்கலைக்கழகங்கள் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளன. ஒவ்வொரு நிறுவனத்திலும், தினசரி பொதுக் கூட்டங்கள் அன்றைய நடவடிக்கைகளைத் தீர்மானிக்கின்றன. ஆர்ப்பாட்டங்களில், 1793 ஆம் ஆண்டின் மனித உரிமைகள் பிரகடனத்தை (கிளர்ச்சியின் கடமை குறித்து) மேற்கோள் காட்டுவது முதல், பிரபலமான ராப் கலைஞர்களை மேற்கோள் காட்டுவது வரை, ‘தலைமுறை X, தலைமுறை Z, ஒரே போராட்டம்!’ என்பதிலிருந்து ‘ஆறாவது தலைமுறை 68-ஐ இலக்காகக் கொண்டுள்ளது’ என்பது வரை கற்பனை வளம் மிக்க வாசகங்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான சுயமாகத் தயாரிக்கப்பட்ட பதாகைகளைக் காணலாம்.

கிளர்ச்சியின் தீப்பிழம்புகளை அணைக்கும் அவசரத்தில், அதிகாரிகள் இந்த வாரம் நூற்றுக்கணக்கான பள்ளிகளையும் பல பல்கலைக்கழக வளாகங்களையும் முன்னெச்சரிக்கையாக மூடி, பெருமளவிலான கதவடைப்புகளை மேற்கொண்டனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் தனது சிக்கன வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற ஆர்வமாக உள்ள மக்ரோனின் சிறுபான்மை அரசாங்கம், மூன்று வழிகளில் எதிர்வினையாற்றியுள்ளது.



அரசின் அடக்குமுறை தீவிரமடைகிறது
முதலாவதாக, வன்முறை மற்றும் அச்சுறுத்தல் மூலம். முடிந்தவரை அதிக அளவில் இளம் போராட்டக்காரர்களை அச்சுறுத்தி விரட்டும் நம்பிக்கையில், காவல்துறையின் அடக்குமுறை மிகக் கடுமையாக இருப்பதை அரசு உறுதி செய்தது. சில நூறு பதின்ம வயதினர் காவல்துறையினரால் காயமடைந்துள்ளனர்; வேறு சில நிகழ்வுகள் நெஞ்சை உலுக்குகின்றன. பாரிஸ் பகுதியில், ஒரு காவல் துறை அதிகாரி 14 வயது சிறுவனின் முகத்தில் மிக அருகில் கண்ணீர்ப் புகைக் குண்டைச் சுட்டார். இதில் அவனது தாடை இரண்டு இடங்களில் நொறுங்கி, அனைத்துப் பற்களும் உடைந்து விழுந்தன; அவனது குடும்பத்தினர் தற்போது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். டூர்ஸில், 16 வயது சிறுவன் ஒருவன், தன்னை நோக்கி நேரடியாகச் சுடப்பட்ட ரப்பர் குண்டால் ஒரு கண்ணை இழந்தான்—காணொளியில், போராட்டக்காரர்களின் கண்களைப் பறித்தது குறித்து காவல்துறை பெருமை பேசுவது கேட்கிறது. மற்ற இடங்களில், பல மாணவர்கள் கடுமையான கண் காயங்களுக்கு உள்ளானார்கள். ஒரு காவல்துறை அதிகாரி ஒரு சிறுமியை வன்முறையான முறையில் கழுத்தை நெரித்துப் பிடிக்கும் காணொளி வைரலானது, அதே நேரத்தில் லென்ஸில், கூட்டத்தைக் கலைக்கப் பயன்படுத்தப்பட்ட கையெறி குண்டு வெடித்ததில் அருகில் நின்ற ஒரு பள்ளி மாணவன் தன் கையை இழந்தான் (ஊடகங்கள் கூறுவது போல் அவன் அதை ‘எடுக்கவில்லை’).

மேலும் அச்சுறுத்தும் முயற்சியாக, ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் — அவர்களில் 1800 பேர் மீது மட்டுமே பின்னர் குற்றம் சாட்டப்பட்டது. இப்போதும் கூட, காவல்துறையின் இந்த அராஜகவாதிகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மறுக்கிறது. உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் (Laurent Nuñez) செவ்வாயன்று, காவல்துறையின் நடவடிக்கைகளில் ‘அளவுக்கு மீறிய செயல்கள்’ இருப்பதாகக் கூறப்படுவதைப் பற்றிப் பேசினார். அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் புருனோ ரீடெய்லோ (Bruno Retaille), குற்றவியல் நடவடிக்கைகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களின் வயதைக் குறைக்க வேண்டும் என்று உரத்த குரலில் கோரினார் (அதாவது பதின் வயதினரையும்கூடகுற்றவாளிகளாக்க் கருத வேண்டும் என்பதுதான் இதன் பொருள்).


இரண்டாவதாக, அரசாங்கம் மிகச் சிறிய சலுகைகளை வழங்கியுள்ளது. அவை வெறும் வெளித்தோற்றத்திற்கு மட்டுமேயானவை. சில உயர்கல்விக் கல்விக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவுகள் திடீரெனக் கைவிடப்பட்டன,.மேலும் பள்ளி மாணவர் சங்கத் தலைவர்கள் கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த அழைக்கப்பட்டுள்ளனர். குறைகளைத் தெரிவிப்பதற்காக அரசாங்கம் பெயரளவிலான இணையதளத்தையும் தொடங்கியுள்ளது, மேலும் வார இறுதியில் அனைத்துப் பள்ளிகளிலும் திட்டமிடப்பட்ட ‘ஆலோசனை அமர்வுகளுக்கு’ ஏற்பாடு செய்துள்ளது.

இறுதியாக, தீவிர இடதுசாரி அமைப்பான ‘லா பிரான்ஸ் இன்சௌமிஸ்’ (La France Insoumise [கிளர்ச்சியில் பிரான்ஸ்]) இளைஞர்களை ஆட்டிவைப்பதாகச் சித்தரிக்க ஒரு பிரச்சாரத் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ‘வெளியிலிருந்து தூண்டிவிடுபவர்கள்’ என்ற பழைய பொய் அணிதிரட்டப்படுகிறது (இந்தியாவில் ‘நகர்ப்புற நக்சல்கள்’ கிளர்ச்சிகளைத் தூண்டிவிடுவதாக சொல்லப்படுகிறது அல்லவா? அதே போன்ற குற்றச்சாட்டை பிரெஞ்சு அரசாங்க இப்போது கிளர்ச்சியில் ஏடுபட்டுள்ள மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோர் மீது சுமத்துகிறது) ஏனெனில் இந்த இயக்கத்தில் ’பிரான்ஸ் இன்சௌமிஸ் கட்சி’ (FI) ஒரு சிறந்த பங்கை வகிக்கிறது. முன்பு அக்கட்சி மீது சந்தேகம்கொண்டிருந்த தீவிர இடதுசாரி வர்ணனையாளர்கள் கூட, இளம் போராட்டக்காரர்கள் இக்கட்சியை தங்கள் கட்சியாகக் கருதுவதாக எழுதியுள்ளனர். அதன் தலைவர் ஜீன்-லூக் மெலென்சோன் (Jean-Luc Mélenchon), நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்ளூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களும் காவல்துறைக்கும் மாணவர்களுக்கும் இடையில் புகுந்து மாணவர்களைப் பாதுகாக்க உதவ வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர்கள் அனைவரும் அங்கு இருந்ததோடு, காவல்துறையின் வன்முறையைக் கண்டிப்பதில் தங்கள் குரலை எழுப்பினர்.

நாடாளுமன்றத்தில், பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu), ‘காவல்துறை வன்முறை’ என்று பேச முடியாது என்று கூறியதுடன், ’பிரான்ஸ் இன்சௌமிஸ் கட்சி’ பிரெஞ்சுக் குடியரசின் காவல்துறைப் படைகள் இனவெறி கொண்டவை என்று மறைமுகமாகச் சொல்கிறது’ என்றும் புகார் கூறினார்!






சர்வாதிகாரத்திற்கு எதிரான தீவிரமடையும் எதிர்வினை
பள்ளி மாணவர் தலைவர்கள் இந்த வெளித்தோற்ற சலுகைகளால் ஏமாறவில்லை. மேலும் முந்தைய போராட்ட நாளுக்கு இரண்டு நாள்களுக்குப் பிறகு, புதிய போராட்ட நாளை அறிவிப்பதன் மூலம் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர். தொழிற்சங்கத் தலைவர்கள் இளைஞர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் காலதாமதம் செய்வதையே விரும்பி, நவம்பரில் வேலைநிறுத்தத்தை நடத்தலாம் என்று முன்மொழிகின்றனர்.


ஆதிக்க சக்திகளின் ஊடகங்கள் இந்த இயக்கத்தின் மீது அவதூறு பரப்புவதிலும், உண்மையைத் திரிப்பதிலும் கடுமையாக உழைத்து வருகின்றன. ஊடகக் கண்காணிப்பு அமைப்பான அக்ரிமெட் (Acrimed), இந்த வாரத் தொடக்கத்தில், பிரதான பொதுத் தொலைக்காட்சி அலைவரிசையான ’பிரான்ஸ் 2’-இன் முக்கிய நேர தேசியச் செய்திகளில், தற்போதைய நிகழ்வுகளின் பல்வேறு அம்சங்களைப் பற்றிப் பேசப்பட்ட நேரத்தை அளவிட்டது. அந்த நேரத்தில் 75%, போராட்டக்காரர்களால் ஏற்படுத்தப்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சேதங்களைப் பற்றிப் பேசவும், 8% இயக்கத்தின் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவும் பயன்படுத்தப்பட்டது.

கோரிக்கைகளும், பிரான்ஸ் இன்சௌமிஸ் அமைப்பு குறித்த அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகளுக்கு 12% ஆதரவும்!
அடுத்த மே மாதம் நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னதாக, பிரான்சில் நிலவும் கடுமையான அரசியல் துருவமயமாக்கலின் பின்னணியில் இந்த எழுச்சி நடைபெறுகிறது. கருத்துக் கணிப்புகளின்படி, பாசிச வேட்பாளர் முன்னணியில் உள்ளார்; தீவிர இடதுசாரியான ’லா பிரான்ஸ் இன்சௌமிஸ் அமைப்பி’ன் வேட்பாளர் ஜீன்-லூக் மெலன்கான் இரண்டாம் இடத்தில் உள்ளார். மாணவர் பேரணிகள் முழுவதும் பாசிச எதிர்ப்பு பதாகைகள் மற்றும் கொடிகள் பரவலாகக் காணப்படுவது, சிக்கன நடவடிக்கைகளுக்கும் காவல்துறை வன்முறைக்கும் எதிரான தங்களின் போராட்டம், தீவிர வலதுசாரிகளுக்கு எதிரான பரந்த போராட்டத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை இளைஞர்கள் உணர்ந்துள்ளதையே பிரதிபலிக்கிறது.
பெரும்பாலான மக்கள் (சமீபத்திய கணக்கெடுப்பின்படி சுமார் 62%) பள்ளி மாணவர்களின் இயக்கத்தை ஆதரிக்கின்றனர் என்பதை கருத்துக் கணிப்புகள் தெளிவாகக் காட்டுகின்றன. மிகவும் தேவையான இந்த எழுச்சியும் ஒற்றுமையும் வெளிப்படுமா என்பதை அடுத்த வாரத்தில் பார்க்கலாம். (தொடரும்)
கட்டுரையாளர்

