ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் விஜய்யுடன் இணைந்து சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலையத்தில் சாமி தரிசனம் செய்தார்.

ஒரு நாள் பயணமாக இன்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, சென்னை பூந்தமல்லி – வடபழனி இடையேயான புதிய மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்ற பின்னர், பிரதமர் மோடி முதல்முறையாக சென்னை வந்துள்ளார். இந்நிலையில் போரூர் மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கி வைத்து நாட்டிற்காக அர்பணித்தார். முதலமைச்சர் விஜய்யின் கையைப் பிடித்து, தன்னுடன் இணைந்து பச்சைக் கொடி காட்ட வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து, இருவரும் இணைந்து பச்சைக் கொடியை அசைத்துப் பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்தனர்.

ADVERTISEMENT

இதையடுத்து இருவரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். பின்னர், பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக ஐஐடி வளாகத்தை நோக்கிப் பிரதமர் மோடி புறப்பட்டார். ஆலந்தூர், கத்திப்பாரா சந்திப்பு, கிண்டி மற்றும் ஆளுநர் மாளிகை வழியாக ஐஐடி வளாகத்தை அவர் சென்றடைந்தார். வழிநெடுகிலும் பாஜகவினர் மற்றும் தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, அங்குள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் பிரதமர் மோடியும் தமிழக முதல்வர் விஜய்யும் சாமி தரிசனம் செய்தனர்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share