பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 11-ந் தேதி) சென்னை வருகை வந்தார். சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர்.
சென்னையில் நடைபெறும் பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகை தந்துள்ளார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னை விமான நிலையம் மற்றும் அவர் செல்லும் வழித்தடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை முதலமைச்சர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். சென்னை வந்த பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

