பிரதமர் மோடி பங்கேற்ற மத்திய அரசு விழா மேடையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உட்கார அனுமதிக்கப்பட்டது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் விருதுநகர் தொகுதி எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக மாணிக்கம் தாகூர் வெளியிட்ட வீடியோ பதிவு: இன்னைக்கு பிரதமருடைய திறப்பு விழாக்கள் இருந்துச்சு. அடிக்கல் நாட்டு விழாக்கள், திறப்பு விழாக்கள்.
அதுல விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலத்திலிருந்து கொல்லம் செல்கின்ற அந்த நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணி முடிந்திருக்கிறதுக்கு, ஒரு பார்ட்டை இன்னைக்கு பிரதமர் ஓபன் பண்ணி வச்சிருக்காங்க. அதுல முதலமைச்சர் அவர்களும் கலந்துகிட்டு இருக்காங்க.
இதுல ரொம்ப ஆச்சரியத்துக்குரிய விஷயம் என்னன்னு கேட்டீங்கன்னா, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் என்னையும் அங்க இருக்கிற ஒரு நிகழ்ச்சியில கலந்துக்க வைக்கலாம்னு நினைச்சாங்க. அதே மாதிரி நிதின் கட்கரி அவர்கள் கலந்துகொள்ளவில்லை, இந்தத் திட்டத்துல. இவ்வளவு பெரிய திட்டத்துல, ப்ராஜெக்ட்ல நிதின் கட்கரி கலந்துகொள்ளாதது ரொம்ப ஆச்சரியமா இருந்தது எனக்கு.
அதே மாதிரி எந்தப் பொறுப்பிலையுமே இல்லாத, எம்.எல்.ஏ.-வாகக் கூட இல்லாத, எம்.பி.-யாகக் கூட இல்லாத அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்கள் எப்படி மேடையில உட்கார்ந்து இருக்காரு? எந்த புரோட்டோகால்லன்னு எனக்குத் தெரியல.

பிரதமர் அவர்களோட மேடையில நயினார் நாகேந்திரன் அவர்கள் எந்த புரோட்டோகால் மூலமாக அமர வைக்கப்பட்டார் என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது.
இது மத்திய அரசினுடைய புரோகிராம். இதற்குன்னு சில புரோட்டோகால் இருக்கு. யார் யாரு? லோக்கல் எம்.எல்.ஏ. இருக்கலாம், மினிஸ்டர்ஸ் இருக்கலாம், லோக்கல் எம்.பி. இருக்கலாம். இதான் புரோட்டோகால்.
ஆனா அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்கள் கடந்த தேர்தல்ல சாத்தூர்ல தோத்துப் போயிட்டாரு. அவரை எப்படி இன்னைக்கு மோடி அவர்கள் அமர வைக்கிறார்கள்? இது என்ன செலக்டிவான இப்படிப்பட்ட பழக்கங்கள் என்பது எனக்குத் தெரியல. இவ்வாறு மாணிக்கம் தாகூர் அந்த வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
