தமிழகத்தில் 7,506 மெகாவாட் மின் திறன் உடைய காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன.
இதில், பெரும்பாலும், தனியார் மின் நிலையங்களுக்குச் சொந்தமானவை. இதனால், தமிழ்நாடு மின்சார வாரியம் தனியாரிடமிருந்து காற்றாலை மின்சாரத்தைக் கொள்முதல் செய்கிறது. இதற்கான கட்டணத்தை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேய்மான செலவு, வரி உள்ளிட்டவற்றை கணக்கிட்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயம் செய்கிறது.
அதன்படி ஏப்ரல் 2016 முதல் மார்ச் 2018 வரை ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.16 என நிர்ணயம் செய்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த விலை இதற்கு முன்பு ரூ.3.39 என்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.