துணை முதல்வராகும் திருமாவளவன்? இடைத்தேர்தலில் போட்டியிடும் தொகுதி எது?

Published On:

| By Mathi

Deputy CM Thirumavalavan

விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரவளிக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் பொறுப்பேற்க உள்ளார். 1969 முதல் தமிழகத்தில் திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்த நிலையில் 57 ஆண்டுகளுக்குப் பிறகு இரு கட்சிகளும் இல்லாத அரசு அமைய இருக்கிறது.

ADVERTISEMENT

தவெக ஆட்சிக்கு விசிக ஆதர வேண்டும் என அக்கட்சித் தலைவர் திருமாவளவனிடம் விஜய் வலியுறுத்தி இருந்தார். மேலும் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி தரப்படும் எனவும் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். அப்போது, ”நான் ராஜினாமா செய்யக் கூடிய பெரம்பூர் அல்லது திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றில் நீங்கள் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகலாம் எனவும் திருமாவிடம் விஜய் கூறியிருந்தார்.

தற்போது விஜய் ஆட்சி அமைப்பது உறுதியான நிலையில் திருமாவளவன் துணை முதல்வராவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ADVERTISEMENT

திருமாவளவன் துணை முதல்வராக..

  • 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ.வாக வேண்டும்.
  • தற்போது சிதம்பரம் மக்களவை தொகுதி எம்.பி.யாக உள்ள திருமாவளவன் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்;
  • 2 தொகுதிகளில் எம்.எல்.ஏ.வாக வென்ற விஜய் பெரம்பூர் அல்லது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
  • விஜய் ராஜினாமா செய்யும் தொகுதிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் போட்டியிட்டு திருமாவளவன் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் தற்போதைய நிலை.
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share