தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க சிபிஐ, சிபிஎம் கட்சிகள் அளித்த ஆதரவு கடிதங்களுடன் ஆளுநர் அர்லேகரை அக்கட்சித் தலைவர் விஜய் சந்தித்தார்.
சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக தலைவர் விஜய் ஏற்கனவே 2 முறை ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்கும்படி கோரிக்கை விடுத்தார். ஆனால் ஆட்சி அமைப்பதற்கான 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவை விஜய் தரவில்லை என ஆளுநர் மாளிகை அறிவித்திருந்தது.
இந்நிலையில் 4 எம்.எல்.ஏக்களைக் கொண்ட் சிபிஐ, சிபிஎம், விஜய்க்கு ஆதரவை தெரிவித்துள்ளன. தங்களது முடிவையே 2 எம்.எல்.ஏக்களைக் கொண்ட விசிக தலைவர் திருமாவளவனும் ஏற்பார் எனவும் சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியிருந்தார்.
இதனையடுத்து கட்சிகளின் ஆதரவு கடிதங்களுடன் ஆளுநர் அர்லேகரை விஜய் தற்போது சந்தித்து மீண்டும் ஆட்சி அமைக்க அழைக்கும்படி கோரியுள்ளார்.
