தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க விஜய்க்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு தரும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)யின் தமிழ் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று மே 8-ந் தேதி சிபிஐ செயலாளர் வீரபாண்டியன், சிபிஎம் செயலாளர் பெ.சண்முகம் இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம், விஜய்க்கு சிபிஐ, சிபிஎம் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தரும்; அமைச்சரவையில் இணையமாட்டோம்; நாடு காக்க திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்போம் என அறிவித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ வீரபாண்டியன், “சிபிஐ, சிபிஎம் எடுக்கும் முடிவை ஏற்பதாக ஏற்கனவே விசிக தலைவர் திருமாவளவனும் அறிவித்துள்ளார்; இன்னும் சற்று நேரத்தில் நாங்கள் மூவரும் சேர்ந்து செய்தியாளர்களிடம் இதை தெரிவிப்போம் என்றார்.
தற்போதைய நிலையில்
- தவெக -107
- காங்கிரஸ் -5
- சிபிஐ -2
- சிபிஎம்- 2
- விசிக- 2
என மெஜாரிட்டிக்கான 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு விஜய்க்கு உள்ளது. இதனால் விஜய் ஆட்சி அமைத்து முதல்வராவதில் சிக்கல் எழவில்லை.
