இடதுசாரிகள் தவெகவுக்கு ஆதரவு ஏன்? விசிக நிலைப்பாடு என்ன?

Published On:

| By Kavi

கவர்னர் ஆட்சி அமையக் கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக இடதுசாரிகள் கூறியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆட்சியமைக்க சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.  இதனால் தவெகவின் பலம் 116ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தநிலையில்   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் வீரப்பாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது பெ.சண்முகம் கூறுகையில், “ஆட்சியில் பங்கேற்கமாட்டோம், தவெகவுக்கு ஆதரவு தருகிறோம். மாநில பிரச்சினையில் ஒத்த கருத்துடைய திமுகவுடன் இணைந்து பயணிப்போம். கவர்னர் ஆட்சி வரக்கூடாது என்பதால் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். கொள்ளைபுற வழியாக பாஜக உள்ளே வருவதை தடுக்கத்தான் இந்த முடிவு” என்று கூறினார்.

ADVERTISEMENT

வீரப்பாண்டியன் கூறுகையில், “எங்களோடு விசிக தலைவரும் பங்கேற்பதாக இருந்தது. அவர் தற்போது ஒரு கூட்டத்தில் இருக்கிறார். அதனால் கலந்துகொள்ள முடியவில்லை. அவர் ஏற்கனவே சிபிஎம், சிபிஐ எடுக்கும் அரசியல் நிலைபாட்டை நான் அப்படியே ஆதரிப்பேன் என்று கூறியிருக்கிறார். அவரது அனுமதியோடு இதை கூறுகிறேன்” என தெரிவித்தார்.

🔴LIVE: சிபிஐ, சிபிஎம் தலைவர்கள் செய்தியாளர் சந்திப்பு நேரலை | Vijay | CPI | CPIM
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share