ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: பி.எப். குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு?

Published On:

| By Pandeeswari Gurusamy

new epfo plan six month special window for employers to enrol left-out employees

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை ரூ.1,000லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பிராவிடெண்ட் பண்ட் (PF) பென்ஷன் குறைந்தபட்சமாக மாதம் ரூ.1,000 மட்டுமே வழங்கப்படுகிறது. தொழிலாளர்களின் ஊதியத்தில் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் பி.எப். நிதியில் ஒரு பகுதி பென்ஷன் திட்டத்துக்காக ஒதுக்கப்படுவது வழக்கம். 2014ஆம் ஆண்டு வரை பென்ஷன் திட்டத்துக்காக ஒருவரின் ஊதியத்தில் ரூ.541 பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. 2014க்குப் பிறகு இது ரூ.1,250 ஆக உயர்த்தப்பட்டது.

ADVERTISEMENT

குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பி.எப். கணக்கு வைத்திருந்தால் ஓய்வூதியம் கிடைக்கு நிலையிர் தற்போது ஓய்வூதியதாரர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.950 கோடி செலவாகிறது.

இந்தத் தொகை ஓய்வூதிய தற்போதைய வாழ்வாதாரச் செலவுகளுக்கு போதுமானதாக இல்லை என தொழிலாளர் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் அமைப்புகள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசு ஓய்வூதியத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்ப்பு

பி.எப். நிறுவன வட்டாரத் தகவலின்படி, ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்த ஆலோசனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நாடாளுமன்றக் குழுவும் இந்த முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே, பி.எப். ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share