டாடா குழுமத்தின் தலைவர் (Tata Group chairman) பதவியில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.சந்திரசேகரன் விலகும் நிலையில் அக்குழுமத்தின் புதிய தலைவர் யார்? என்பது குறித்து விவாதங்கள் நடைபெறுகின்றன.
டாடா குழுமத்தின் தலைவராக 10 ஆண்டுகளாக பதவி வகித்த என்.சந்திரசேகரன், அடுத்த ஆண்டு பிப்ரவரி 20-ந் தேதி பதவி விலகுகிறார். இதனையடுத்து டாடா குழுமத்தின் புதிய தலைவரை தேர்வு செய்ய தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் டாடா குழுமத்தின் அடுத்த தலைவருக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளோர்..

டாடா டிரஸ்ட்ஸ் தலைவராக இருப்பவர்; டாடா சன்ஸ் போர்டின் நிர்வாகம் சாராத இயக்குநர். ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர்; டாடாவின் ரீட்டெய்ல் துறையில் நீண்டகால அனுபவம் வாய்ந்தவர்.

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநர். கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்; திருச்சியில் படித்தவர். 1988-ம் ஆண்டு முதல் டாடா குழுமத்தில் பணியாற்றியவர்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி. 2017-ல் டாடா சன்ஸில் இணைந்தவர். டாடா கேப்பிடல், டாடா டிஜிட்டல், டாடா பிளே நிறுவனங்களின் முதன்மை அதிகாரி. முதலீடு சார் துறைகளில் அனுபவம் பெற்றவர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநர். 1995 முதல் டாடா மோட்டார்ஸில் பணியாற்றுகிறார்.

டாடா குழுமத்தின் டிரெண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி. நோயல் டாடாவின் வலது கரமாக கருதப்படுகிறவர். 2008-ம் ஆண்டு முதல் டிரெண்ட் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

டாடா சன்ஸ் பிராண்ட் கஸ்டோடியன் ஹரிஷ் பட். 1987-ம் ஆண்டு முதல் டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களில் பொறுப்பு வகித்தவர். டாடா ஸ்டார்பக்ஸ், இன்பினிட்டி ரீட்டெய்ல், டிரெண்ட் நிறுவனங்களில் போர்டு இயக்குநராக உள்ளார்.
