குறைந்த விலை ப்ரீபெய்டு பேக் நீக்கம்… கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்!

Published On:

| By Kavi

ஏர்டெல் நிறுவனம் சில ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்களை எந்த அறிவிப்பும் இல்லாமல் நீக்கி உள்ளது. 

இந்தியாவில் ஏர்டெல், ஜியோ, வோடாபோன் ஆகிய நெட்வொர்க்குகளை தான் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகின்றனர். பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை குறிப்பிட்ட சதவிகிதம் பேர் பயன்படுத்துகின்றனர். 

ADVERTISEMENT

சுமார் 34.4 கோடி பேர் ஏர்டெல் ப்ரீபெய்டு மொபைல் வாடிக்கையாளர்களாக உள்ளனர். 

இந்த நிலையில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக நான்கு பிரிபெய்டு பிளான்களை ஏர்டெல் நீக்கி இருக்கிறது 

ADVERTISEMENT

எந்த முன்னறிவிப்பும் இன்றி ரூ.299, ரூ.579, ரூ.619, ரூ.649 ஆகிய திட்டங்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. 

ரூ.299 திட்டத்திற்கு பதிலாக ரூ349 பேக் கொண்டுவரப்பட்டுள்ளதால் 28 நாள் தினசரி டேட்டா ரீசார்ஜ் -ன் தொடக்க விலை உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

அதுபோன்று ரூ.859 திட்டத்தை ரூ.899ஆக உயர்த்தியுள்ளது.

முன்பு ஒவ்வொரு மாதமும் ரூ.299 செலுத்தி வந்த ஏர்டெல் பயனர்கள், இப்போது அதே அளவிலான தினசரி டேட்டா திட்டத்திற்கு ரூ.50 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

இந்த அதிகரிப்பு சுமார் 17 சதவீதமாக உள்ளது, இருப்பினும் ரூ.349 திட்டத்திலும் கூடுதல் தினசரி டேட்டா கிடைக்கிறது.

ஜியோ தற்போது வரம்பற்ற வாய்ஸ் அழைப்புகள், தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் ரூ.349 திட்டத்தை வழங்குகிறது.

வோடாபோன் இந்தியா  நிறுவனம் ரூ.349 மற்றும் ரூ.365 திட்டங்களை வழங்குகிறது. 

ஏர்டெல்லின் திடீர் கட்டண உயர்வு மற்றும் குறைந்த விலைத் திட்டங்களின் நீக்கம் மொபைல் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share