தமிழகத்தில் அதிகரித்த கிரெடிட் கார்டு பாக்கி!

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிலுவையில் உள்ள கிரெடிட் கார்டு பாக்கிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகி உளளது.

ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் கடந்த திங்கள் கிழமை பதில் அளித்துள்ளது.

ADVERTISEMENT

அந்த தரவுகளின் படி, நிலுவையில் உள்ள கிரெடிட் கார்டு பாக்கிகளில் பெரும்பாலான பங்கை தனியார் வங்கிகளே கொண்டுள்ளன.

இவற்றின் நிலுவைத் தொகை 2022 மார்ச்சில் 1.46 லட்சம் கோடி ஆக இருந்தது.. இது 2026 மார்ச்சில் 2.81 கோடியாக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

அதே நேரத்தில் பொதுத்துறை வங்கிகளில் நிலுவையில் உள்ள கிரெடிட் கார்டு பாக்கிகள் இதே காலத்தில் ரூ .1,123 கோடியிலிருந்து ரூ.5,667 கோடியாக அதிகரித்துள்ளது.

தனிப்பட்ட வங்கிகளை (individual banks) பொறுத்தவரை ஹெச்டிஎஃப்சி வங்கி மிக அதிக அளவாக 2026 மார்ச்சில் ரூ.1.12 லட்சம் கோடி கிரெடிட் கார்டு கடன் பாக்கியை வைத்துள்ளது. இது 2022 மார்ச்சில் ரூ.71,928 கோடியாக இருந்தது.

ADVERTISEMENT

அதற்கு அடுத்தபடியாக ஐசிஐசிஐ வங்கி ரூ.54,865 கோடி நிலுவைத் தொகையையும், ஆக்சிஸ் வங்கி ரூ.49,702 கோடி நிலுவைத் தொகையையும் கொண்டுள்ளன.

ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் கிரெடிட் கார்டு பாக்கி தொகை 2022 மார்ச்சில் ரூ.2,007 கோடியிலிருந்து 2026 மார்ச்சில் ரூ.9165 கோடியாக அதிகரித்துள்ளது

ஆர்பிஎல் வங்கி ரூ.16,430 கோடி, கோடக் மஹிந்திரா ரூ.12,852 கோடி,  இண்டஸ்இண்ட் வங்கி ரூ.9,962 கோடி, யெஸ் வங்கி ரூ.8,827 கோடி கிரெடிட் பாக்கி தொகைகள் வைத்துள்ளன. 

மத்திய நிதி அமைச்சகம் அளித்த பதிலில், கிரெடிட் , டெபிட் கார்டுகள் வழங்குதல், ஆக்டிவேட் செய்தல், கடன் வரம்பை உயர்த்துதல் மற்றும் வரம்பை மீறி பணம் செலவழிக்கும் வசதி  ஆகியவற்றுக்கு வாடிக்கையாளர்களின் நேரடியான ஒப்புதல் கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி  2025ஆம் ஆண்டு வழிகாட்டுதல்களில் தெரிவித்துள்ளது.

கடன் சுமை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்த விதிமுறைகளைக் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share