EMI நிலுவையில் இருக்கும்போதே கிரெடிட் கார்டை மூடலாமா? என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

Published On:

| By Minnambalam Desk

கிரெடிட் கார்டை பயன்படுத்தாமல் இருக்கிறோம், ஆண்டு கட்டணம் அதிகமாக இருக்கிறது அல்லது வேறு சிறந்த கார்டுக்கு மாறிவிட்டோம் என்பதற்காக அதை மூட நினைப்பது இயல்புதான். ஆனால் அந்த கார்டில் ஏற்கனவே EMI நிலுவையில் இருந்தால், உடனடியாக கார்டை மூடுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. EMI என்பது கிரெடிட் கார்டுடன் இணைக்கப்பட்ட தனிப்பட்ட கடன் வசதியாக இருப்பதால், கார்டை மூடுவதற்கு முன்பு நிலுவைத் தொகை மற்றும் வங்கியின் விதிமுறைகளைத் தெரிந்துகொள்வது அவசியம். 

EMI இருக்கும் போது கார்டை மூட முடியுமா?

ADVERTISEMENT

பல வங்கிகளில் செயலில் இருக்கும் EMI வசதி இருக்கும் நிலையில் கிரெடிட் கார்டை நேரடியாக மூட முடியாமல் இருக்கலாம். முதலில் நிலுவையில் உள்ள EMI தொகையை செலுத்தி, அந்த EMI கணக்கை foreclose செய்ய வேண்டியிருக்கலாம்.

ஆனால் முன்கூட்டியே EMI-யை முடித்தால், வங்கியைப் பொறுத்து foreclosure அல்லது prepayment கட்டணம் விதிக்கப்படலாம். உதாரணமாக, சில வங்கிகள் நிலுவையில் உள்ள அசல் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை வசூலிக்கின்றன. எனவே கார்டை மூடுவதற்கு முன்பு உங்கள் வங்கியிடம் முழுமையான foreclosure amount-ஐ கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. 

ADVERTISEMENT

CIBIL ஸ்கோரில் தாக்கம் ஏற்படுமா?

கிரெடிட் கார்டை மூடுவது உங்கள் CIBIL ஸ்கோரில் நேரடியாக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. ஆனால் கார்டை மூடிய பிறகு உங்கள் மொத்த available credit limit குறைந்துவிடலாம். அதே அளவு கடன் மற்ற கார்டுகளில் தொடர்ந்தால், credit utilisation ratio அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது உங்கள் credit profile மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். 

ADVERTISEMENT

குறிப்பாக நீண்ட காலமாக பயன்படுத்தி வரும் பழைய கிரெடிட் கார்டை மூடுவது, உங்கள் credit history-யின் அமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

EMI-யை முடிப்பதா அல்லது தொடர்ந்து செலுத்துவதா?

உங்களிடம் போதுமான பணம் இருந்தால், EMI-யை முன்கூட்டியே முடிப்பதால் எதிர்கால வட்டி மற்றும் சில கட்டணங்களைச் சேமிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் foreclosure charge மற்றும் அடுத்தகட்ட வட்டி போன்ற செலவுகளையும் கணக்கில் எடுத்த பிறகே முடிவு செய்ய வேண்டும்.

சில கிரெடிட் கார்டு EMI திட்டங்களில் முன்கூட்டியே முடிப்பதற்கு 3% வரை foreclosure charge மற்றும் அடுத்த மாதத்திற்கான வட்டி விதிக்கப்படலாம். எனவே, “EMI-யை இப்போதே முடித்துவிட்டால் பணம் மிச்சமாகும்” என்று கணக்கிடுவதற்கு முன்பு வங்கியின் குறிப்பிட்ட விதிமுறைகளைப் பார்க்க வேண்டும். 

கார்டை மூடுவதற்கு முன் இந்த 4 விஷயங்களைச் சரிபாருங்கள்

முதலில் நிலுவையில் உள்ள EMI அசல் தொகை எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அடுத்து foreclosure charge, GST மற்றும் பிற கட்டணங்கள் உள்ளதா என்பதை வங்கியிடம் கேளுங்கள். அதன் பிறகு கார்டை மூடியால் உங்கள் மொத்த credit limit எவ்வளவு குறையும் என்பதையும் கணக்கிடுங்கள்.

அனைத்து நிலுவைகளையும் செலுத்தி கார்டை மூடிய பிறகு, No Dues/closure confirmation பெற்றுக்கொள்வதும் முக்கியம். பின்னர் உங்கள் credit report-ல் கணக்கு “Closed” என சரியாகப் பதிவாகியுள்ளதா என்பதைச் சரிபார்த்தால் எதிர்காலத்தில் தேவையற்ற கடன் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

URL:

SEO Tags (English):

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share