டாடா குழுமத்தின் புதிய தலைவர் யார்? தேர்வு குழு!

Published On:

| By Mathi

Tata Group's New Chairman- Selection Committee Formed

டாடா குழுமங்களின் (TATA) தலைவர் பதவியில் இருந்து என்.சந்திரசேகரன், விலகுவதாக அறிவித்ததை ஏற்றுக் கொண்டுள்ள டாடா டிரஸ்ட்ஸ் (Tata Trusts), புதிய தலைவரை தேர்வு செய்ய குழு அமைக்க முடிவு செய்துள்ளது.

டாடா குழுமங்களின் தலைவரான என்.சந்திரசேகரன் பதவி காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 20-ந் தேதி முடிவடைகிறது. அவரது பதவி நீட்டிப்புக்கு எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து டாடா குழும தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக என். சந்திரசேகர் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பங்கு சந்தையில் டாடா குழும மதிப்புகள் 3 சதவீதம் சரிந்து ரூ80,000 கோடி இழப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் டாடா டிரஸ்ட்ஸ் இன்று ஆகஸ்ட் 13-ந் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2027-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந் தேதிக்குப் பின் தாம் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்ற என்.சந்திரசேகர் கடிதத்தை ஏற்பதாகவும் புதிய தலைவரை தேர்வு செய்ய தேர்வுக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து டாடா குழுமத்தின் புதிய தலைவர் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share