முஸ்லிம் பெயரை பார்த்து மூக்கு புடைத்த ராஜா… மூக்குடைந்த பின்னணி! – நன்றி உணர்வின் அடையாளம் நர்கிஸ்கான்

Published On:

| By Kumaresan M

who is nargish khan?

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ரெகுநாதபுரம் கிராமத்தில் ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நர்கிஸ்கான் என்கிற முஸ்லிம் ஒருவர் அறங்காவலராக நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக சமூகவலைத்தளங்களிலும் பல தகவல்கள் பரப்பப்பட்டு வந்தது.who is nargish khan?

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஹெச். ராஜா தன் எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில், ‘பெருமாள் கோவில் அறங்காவலராக இஸ்லாமியரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறை. இதுபோல் மசூதி பொறுப்புகளில் ஒரு இந்துவை தமிழக அரசு நியமிக்குமா? இது திட்டமிட்டு இந்து கோவில்களை அழிக்கும் முயற்சி..!!

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா நெடுந்தெரு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராஜகோபால பெருமாள் கோவிலின் அறங்காவலராக நர்கீஸ் கான் என்கிற இஸ்லாமியரை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நியமித்திருக்கிறார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் கடவுளாக ஏற்றுக் கொள்ளாத இஸ்லாமியர் எப்படி இந்து கோவில்களை பராமரிப்பார்? அவர் எப்படி கோவில்களில் வழிபாடு நடத்துவார்?’who is nargish khan?

என்று அந்த பதிவில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ராஜகோபால சுவாமி கோவில் செயல் அலுவலர் கொடுத்துள்ள விளக்கத்தில், ‘நர்கிஸ்கான் இந்து மதத்தை சேர்ந்தவர். நர்கிஸ்கானின் தாயார் பிரசவ காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். அப்போது, மருத்துவர் நர்கிஸ்கான் என்பவர் சிக்கலான அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வயிற்றில் இருந்து வெளியே எடுத்துள்ளார். அந்த நன்றியின் அடிப்படையில் அந்த மருத்துவரின் பெயரையே நர்கிஸ்கானுக்கு அவரின் தந்தை தங்கராஜ் பெயராக சூட்டினார். இதுதான், நர்கிஸ்கானின் பெயர் பின்னணி’ என்று தெரிவித்துள்ளார்.who is nargish khan?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share