தனி ஆவர்த்தனம் செய்வது யார்? ஸ்டாலினுக்கு தவெக பதில்

Published On:

| By Mathi

Who is Doing Solo Performance? TVK's Reply to Stalin

காவிரி பிரச்சனையில் முதல்வர் விஜய்யை விமர்சித்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வெற்றிக் கழகம் பதிலளித்துள்ளது.

வெக ஐடிவிங் வெளியிட்ட எக்ஸ் பதிவு: விவசாயிகள் நலன்களுக்காகவும்
கர்நாடக வாழ் தமிழ்ச் சொந்தங்களுக்காகவும் யோசித்துச் செயல்படுவதுதான் மக்கள் விரும்பும் முதல்வர், நம் வெற்றித் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மனசாட்சி உள்ள மக்களாட்சி.

ADVERTISEMENT

திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை, எங்கள் வெற்றித் தலைவர்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒன்றிய அரசிடம் பேரம் பேசி, பெற வேண்டிய இலாகாக்களைப் பெற்ற போதெல்லாம் காவிரி விவகாரத்திற்காக ஒரு மந்திரி பதவியையாவது, ஒருநாளாவது உதறி இருக்குமா இந்த திமுக?

ADVERTISEMENT

அத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முயன்றிருக்குமா இந்த திமுக? அப்போதெல்லாம் பதவியில் ஒட்டிக்கொண்டு சுகம் கண்ட சுயநல இயக்கம்தான் இந்தத் திமுக.

ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்றுகூடச் சத்தம் எழுப்பாத காரியப் பூனைதான் திமுக. ஆனால், ஆட்சி பறிபோன பிறகு பாருங்கள் மண், மொழி, மானம் என்று உரிமை முழக்கத்தை எழுப்பி எம்பி எம்பிக் குதிக்கும்.

ADVERTISEMENT

எப்போதும் மக்களைத் தூண்டிவிட்டுக் குளிர்காயும் திமுக, இப்போது எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறிக்கொண்டு இருக்கிறது. கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுக, காவிரி விவகாரத்தில் கபட நாடகமாடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

எனவே, காவிரிப் பிரச்சனையில் ஸ்டாலின், திமுக ஆட்சி போய்விட்டதே, தவெக ஆட்சி வந்து விட்டதே என்று வன்மமாகப் பேசாமல் மக்கள் நலன் சார்ந்து உண்மையாகப் பேச வேண்டும். அப்படி அவரால் பேச முடியுமா? முடியாதா? என்றால் அவர் உள்மனம் முடியாது என்றுதான் உண்மையான வன்மம் பேசும். இது அவர் மட்டுமன்று, உலகமே அறிந்த உண்மை. இவ்வாறு தவெக பதிலளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share