VIDEO: சென்னையில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு!

Published On:

| By Mathi

Rousing Welcome for Rahul Gandhi in Chennai

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஆகஸ்ட் 1) சென்னை வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

மாமல்லபுரத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் 74 மாவட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறுகிறார் ராகுல் காந்தி. இதன் பின்னர் இன்று மாலை 7 மணிக்கு ராகுல் காந்தி டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

படங்கள்:

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share