டாஸ்மாக் முறைகேடு வழக்கு : இரண்டு பேர் கைது!

Published On:

| By Kavi

டாஸ்மாக் நிறுவன முறைகேடு வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. 

டாஸ்மாக் நிறுவன முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, விசாகன் ஐஏஎஸ் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூலை 29ஆம் தேதி சோதனை மேற்கொண்டது.

ADVERTISEMENT

இந்த வழக்கில், செந்தில் பாலாஜி, விசாகன் ஐஏஎஸ், டாஸ்மாக் முன்னாள் மூத்த மண்டல மேலாளர்கள் ராமதுரை, பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் பாஸ்கர், செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளிகள் ரதேஷ் ராஜ், கார்த்திக் உள்ளிட்டோர் வழக்கில் சேர்க்கப்பட்டனர். 

இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமின் மறுத்த நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 31) முன்ஜாமின் வழங்கி உள்ளது. 

ADVERTISEMENT

இதற்கிடையே நடைபெற்ற விசாரணையின் போது கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளியான கரூரைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் ஜூலை 30ஆம் தேதி கைது செய்யப்பட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தற்போது அவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share