வாட்ஸ்-ஆப், பேஸ்ஃபுக் நண்பர்கள் கலந்தாய்வு கூட்டம்.

Published On:

| By Balaji

கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதிக்கு உட்பட்ட வாட்ஸ்-ஆப், ஃபேஸ்புக், நண்பர்களுக்கு முன்னாள் திமுக, எம்.எல்.ஏ, சபாராஜேந்திரன் கலந்தாய்வு கூட்டத்துக்கு சுமார் 600 பேருக்கு அழைப்பு அனுப்பினார். ஏப்ரல் 3 -ம் தேதி பண்ருட்டி அருகில் உள்ள காடம்புலியூர் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர், சபா பேசும்போது இந்த நிகழ்ச்சி தேர்தலுக்கு மட்டுமானது அல்ல, நாம் தொடர்ந்து சந்திக்க வேண்டும். நமது தொகுதியில் 20 ஆயிரம் வாக்குகள் புதிய வாக்குகள் அதுவும் இளம் வாக்குகள் இவைகளை முகநூல், வாட்ஸ் ஆப் மூலம் நாம் திரட்ட வேண்டும். திமுக வேற்றி பெற, ஆளும் கட்சி குற்றசாட்டுகளுக்கு கருத்தியல் ரீதியாக பதிலடி கொடுங்கள், நீங்கள் அதிகமாக படிக்கவேண்டும், மின்னம்பலம்.காம் இணைய இதழ் தினந்தோறும் படியுங்கள் அதில் நல்ல கட்டுரைகள், அரசியல் செய்திகள் வருகிறது படியுங்கள், அன்றாடம் அரசியல் பேச வாட்ஸ் ஆப்பில் பதிலடி கொடுக்க சரியாக இருக்கும் என்று சொல்ல, சற்றுநேரத்தில் அனைவரும் செல் எடுத்து மின்னம்பலத்தை பார்க்க ஓப்பன் செய்தார்கள்.

ADVERTISEMENT
Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share