ஒரே சோபாவில் ஸ்டாலின் – சீமான்… அருகில் வைகோ

Published On:

| By Kavi

திருமண நிகழ்ச்சி ஒன்றில் அரசியல் கட்சித் தலைவர்களான ஸ்டாலின், வைகோ, சீமான் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.

புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இயக்குநர் கௌதமன் இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் ஏரளமான விஐபிகள் கலந்துகொண்டனர். அந்தவகையில், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மூன்று பேரும் ஒரே சமயத்தில் விழாவுக்கு வந்ததால், ஒருவருக்கு ஒருவர் கைகொடுத்து நலம் விசாரித்து பேசிக்கொண்டனர்.

ADVERTISEMENT

குறிப்பாக முன்னாள் முதல்வர் ஸ்டாலினும், சீமானும் இரு இருக்கை கொண்ட ஒரே சோபாவில் அமர்ந்திருந்தனர். அருகில் இருந்த சோபாவில் வைகோ அமர்ந்திருந்தார்.

அப்போது மூவரும் எதையோ சுவாரஸ்யமாக பேசிய கொண்ட வீடியோவும், புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

அரசியல் ரீதியாக திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசியவர் சீமான். தற்போது திமுகவுடன் கூட்டணியில் வெற்றி பெற்றிருந்தாலும் மதிமுக தவெக ஆட்சிக்கு ஆதரவாக பேசி வருகிறது.

இப்படி தேர்தல் களம், கொள்கை, மேடை விமர்சனங்கள் ஆகியவை ஒருபுறம் இருந்தாலும், தமிழக அரசியல் தலைவர்கள் பொது நிகழ்ச்சிகளில் தங்களின் அரசியல் பகையை மறந்து, நட்பு பாராட்டுவது அவர்களின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share