அமரன் படத்தில் இந்தி பேசிய சிவகார்த்திகேயன், பராசக்தியில் என்ன பேச போகிறார் தெரியுமா?

Published On:

| By Kumaresan M

அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய மார்க்கெட் உருவாகி விட்டது. தற்போது, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்திலும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

பராசக்தி படம் இந்தி எதிர்ப்பை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. அமரன் படத்தில் ராணுவ வீரராக இந்தி பேசி நடித்த சிவகார்த்திகேயன் இந்தி திணிப்புக்கு எதிரான படத்தில் எத்தகைய வசனங்களை பேசப் போகிறார் ? என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.what is the story of Parasakthi film

பராசக்தி படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிக்கப் போவதாக சொல்லப்பட்டது. ஆனால், ஏதோ காரணத்தினால் அவர் வெளியேறி விட்டதால் சிவகார்த்திகேயன் ஹீரோவானார். இந்த படத்தில் ரவிமோகன் வில்லனாக நடிக்கிறார்.

இதனால் பராசக்தி படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதர்வா , ஸ்ரீலீலா ஆகியோரும் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.what is the story of Parasakthi film

பராசக்தி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகார்த்திகேயன், அதர்வா மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா ஆகியோர் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்ப்பட்டியிலுள்ள விநாயகர் கோவிலுக்கு சென்றுள்ளனர்.

கோவிலில் வழிபாடும் நடத்தியுள்ளனர். கோவிலில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சுதா கொங்கரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.what is the story of Parasakthi film

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share