பிரபல நடிகை ஷகீலாவின் (Actress Shakeela) ஆபரேஷன்தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசுபொருளாகி இருக்கிறது.
நடிகை ஷகீலா தமது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமக்கு கழுத்து பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறித்து பேசியுள்ளார்.

ஷகீலாவின் எச்சரிக்கை வீடியோ
அந்த வீடியோவில் ஷகீலா பேசியுள்ளதாவது: சமீபத்துல எனக்கு ஒரு ஆபரேஷன் ஆச்சு, இப்பதான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு வந்தேன். டாக்டர் பாலமுருகன் சார் எனக்கு ஒரு சர்ஜரி பண்ணாரு. சீரியஸா சொல்றேன், விளையாட்டுக்கு இல்ல. என் குழந்தைங்க, என் மக்களுக்கு எல்லாருக்குமே இந்த போன் என்றது ஒரு யூஸ்ஃபுல்லான கேட்ஜெட்தான், எவ்வளவு தேவையோ அவ்வளவு யூஸ் பண்ணா மட்டும்.

எனக்கு கழுத்துல ரெண்டு எலும்பு.. நடுவுல இருந்து ஜவ்வு வெளியே வந்துருச்சு. அதுக்கு இப்ப ஒரு டைட்டானியம் சிப் வச்சு ஸ்குரூ போட்டுருக்கறாங்க. முற்றிலும் இது ஒரு தேவையில்லாத வேலை, ஒரு அனாவசிய செலவு. செலவு ஒரு பக்கம் இருந்தாலும், வலி வேதனை… உங்க எல்லாருக்கும் நான் ஒன்னே ஒன்னுதான் சொல்லிக்கிறேன்.
இன்பேக்ட் இத ஒரு வேண்டுகோளா கேட்டுக்கிறேன், இப்பத்துல இருந்தே குழந்தைங்க கையில மொபைல் கொடுக்கறது அவாய்ட் பண்ணுங்க. நீங்க கூட எவ்வளவு நேரம் தவிர்க்க முடியுமோ அவ்வளவு நேரம் இந்த வீடியோஸ் பார்க்கறதாகட்டும், என் வீடியோவும் சேர்த்துதான், கொஞ்சம் எல்லாத்தையும் அவாய்ட் பண்ணிக்கோங்க. முக்கியமான இன்பர்மேஷன் ஏதாவது இருந்தா பாருங்க..

ஏன் நான் இப்படி சொல்றேன்னா, உண்மையிலேயே இது ஒரு அனாவசிய செலவு. மூன்று லட்சம் ரூபாய் செலவு ஆயிடுச்சு. செலவு ஒரு பக்கம் இருந்தாலும், வலி, வேதனை… உங்க எல்லாருக்கும் நான் ஒன்னே ஒன்னுதான் சொல்லிக்கிறேன்…
இன்பேக்ட் இது ஒரு வேண்டுகோளா கேட்டுக்கிறேன், இப்பத்துல இருந்தே குழந்தைங்க கையில மொபைல் கொடுக்கறது அவாய்ட் பண்ணுங்க. நீங்க கூட எவ்வளவு நேரம் தவிர்க்க முடியுமோ அவ்வளவு நேரம் இந்த வீடியோஸ் பார்க்கறதாகட்டும், என் வீடியோவும் சேர்த்துதான், கொஞ்சம் எல்லாத்தையும் அவாய்ட் பண்ணிக்கோங்க.

முக்கியமான இன்பர்மேஷன் ஏதாவது இருந்தா இப்ப நான் சொன்னேனே, அந்த மாதிரி இன்பர்மேஷன் இருந்தா பாருங்க. இல்லன்னா… ரொம்ப வலி. அதனால என்னோட அன்பு குழந்தைகளுக்கும், என் கூட பிறந்தவங்க மாதிரி நான் யார யார நினைக்கிறேனோ அவங்க எல்லாருக்கும் சொல்லிக்கிறேன். போன வந்து ரொம்ப லிமிட்டடா யூஸ் பண்ணுங்க, பாத்துக்கோங்க, உடம்பு பாத்துக்கோங்க. இவ்வாறு நடிகை ஷகீலா தெரிவித்துள்ளார்.
