ADVERTISEMENT

வெயிலிலும் வரவேற்பு: ஒன்றரை கிலோ மீட்டர் மக்களுடன் நடந்த ஸ்டாலின்

Published On:

| By Aara

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 18) திருவள்ளூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக இன்று பொன்னேரிக்கு வருகை தந்தார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னையில் இருந்து புறப்பட்டு பொன்னேரி வந்த முதல்வரை மாவட்ட அமைச்சர் ஆவடி நாசர் தலைமையில் திமுகவினர் வரவேற்றனர்.

பொன்னேரியில் இருந்து விழா நடக்கும் ஆண்டாள் குப்பம் வரையிலும் இரு மருங்கிலும் மக்கள் திரண்டு நின்றனர். Welcome in heat: Stalin walks one and a half kilometers

ADVERTISEMENT

இதனைக் கண்ட முதல்வர் ஸ்டாலின், பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே காரிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தார். மக்களின் வரவேற்பை அவர்களை நெருங்கி கைலுக்கி பெற்றுக் கொண்டார் ஸ்டாலின். காலையிலேயே வெயில் கடுமை காட்டிய நிலையிலும், சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தை அரை மணி நேரம் நடந்து மக்களின் வரவேற்பை பெற்றுக் கொண்ட முதலவர், அதன் பின் நிகழ்ச்சிக்கு நேரம் ஆகிவிட்டதால் காரில் ஏறி மேடைக்கு விரைந்தார்.

நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய முதல்வர் ஸ்டாலின்,

ADVERTISEMENT

“நான் இந்த நிகழ்ச்சிக்கு கொஞ்சம் தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறேன். இதற்கு நான் காரணமல்ல., அமைச்சர் ஆவடி நாசர் தான். அவர் செய்த ஏற்பாடுகளைத் தாண்டி பொது மக்கள் திரண்டு எனக்கு வரவேற்பு அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்டு வருவதற்கு இங்கே தாமதமாகிவிட்டது” எனது மக்கள் வரவேற்பை பற்றி சிலாகித்து குறிப்பிட்டார்.

மேலும் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “1166 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத் திட்டங்களை இன்று உங்களுக்கு வழங்க இருக்கிறேன். அதுமட்டுமல்ல… 63 ஆயிரத்து 124 பேருக்கு பட்டா வழங்குகிறேன். இவ்வளவு அதிகமாக இதுவரை நான் யாருக்கும் பட்டா கொடுத்ததில்லை. அதற்காக அமைச்சர் ஆவடி நாசருக்கும், அதிகாரிகளுக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share