சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தற்போதைய காலகட்டத்தில் மக்கள் தங்களது உடல்நலனுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதை காண முடிகிறது. குறிப்பாக
மக்கள் ஊட்டச்சத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். காய்கறிகள், கீரைகள், முட்டை, தானியங்கள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். அதுபோன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்றாக சோயாபீன்ஸ் உள்ளது. அசைவ உணவு சாப்பிடுபவர்கள் இறைச்சிகளில் இருந்து புரதங்களை (Protein Rich Foods) பெறுகிறார்கள். ஆனால், சைவ உணவு உண்பவர்கள் புரதத்திற்கு சோயாபீன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக ஊட்டச்சத்துக்களை வழங்கும் சோயா பீன்ஸ் பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
தசைகளை வலுப்படுத்த உதவுகிறது
சோயாபீன்ஸ் புரதத்தின் களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. உடலுக்குத் தேவையான ஏறக்குறைய அனைத்து அமினோ அமிலங்களும் இதில் உள்ளன. இவை தசைகளை வலுப்படுத்துவது (strengthen muscles) மட்டுமல்லாமல், உடலுக்குப் போதுமான ஆற்றலையும் வழங்குகின்றன. குறிப்பாக, உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் உடலைக் கட்டமைப்பதில் கவனம் செலுத்துபவர்கள் தங்கள் உணவில் சோயாபீன்ஸைச் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
எலும்பு பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது
பலர் முழங்கால் வலி, முதுகு வலி மற்றும் கழுத்து வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் பலரை வாட்டி வதைக்கின்றன. சோயாபீன்ஸ் தவறாமல் உட்கொள்வது எலும்பு பலவீனத்தைக் (Bone Health) குறைக்கும். வாரத்திற்கு குறைந்தது மூன்று நாட்களாவது 30 முதல் 50 கிராம் சோயாபீன்ஸை உட்கொள்வது எலும்பு இழப்பைக் குறைக்கும்.
பெண்களுக்கு அருமருந்து சோயாபீன்
சோயாபீன்ஸ் குறிப்பாக பெண்களுக்கு (Benefits of soybeans for women) அதிக நன்மைகள் தருகிறது. மாதவிடாய் நின்ற பிறகு, பல பெண்களுக்கு கால்சியம் குறைபாடு மற்றும் எலும்புகள் பலவீனமடையும் அபாயம் உள்ளது. அந்த சமயத்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் நிறைந்த சோயாபீன்ஸை உணவில் சேர்ப்பது கால்சியம் குறைபாட்டைக் குறைக்கும். குறைந்தது ஆறு மாதங்களுக்கு தினமும் சுமார் 30 கிராம் சோயாபீன்ஸை உட்கொள்வது நன்மை அளிக்கிறது.
உடல் எடையை கட்டுப்படுத்துகிறது
உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் சோயாபீன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக எடையுடன் இருப்பவர்களின் கொழுப்பைக் குறைக்க உதவுவது (Weight Loss Diet) மட்டுமல்லாமல், பலவீனமாக இருப்பவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும் உதவுகிறது. மேலும், நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதிலும் இது பயனுள்ளதாக இருக்கிறது.
இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது
சோயாபீன்ஸ் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் (LDL) குறைத்து, இதய நோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கின்றன. அதனால்தான், தினமும் குறைந்த அளவில் சோயாபீன்ஸ் உட்கொள்வது எந்தத் தீங்கும் விளைவிக்காது. பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
