Sony LIV -ல் ராஜீவ் காந்தி படுகொலையை விவரிக்கும் வெப்சீரிஸ்

Published On:

| By Minnambalam Desk

Rajiv Gandhi Soni Liv

Sony LIV-ல் ஜூலை 4-ந் தேதி முதல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையை விவரிக்கும் ‘‘The Hunt: The Rajiv Gandhi Assassination Case’ வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. Rajiv Gandhi Assassination

1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி தமிழ்நாட்டின் ஶ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் இன்னமும் அவிழ்க்கப்படாத பல மர்ம முடிச்சுகள் இருக்கின்றன.

ADVERTISEMENT

ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தை முன்வைத்து திரைப்படங்கள், வெப் சீரிஸ் வெளியாகி இருக்கின்றன. தற்போது Sony LIV -ல் ‘The Hunt: The Rajiv Gandhi Assassination Case’ என்ற பெயரில் ராஜீவ் காந்தி படுகொலையை விவரிக்கும் வெப்சீரிஸ் ஒளிபரப்பாக உள்ளது.

https://twitter.com/SonyLIVIntl/status/1935285385057444169

பத்திரிகையாளர் Anirudhya Mitra- வின் Ninety Days புத்தகத்தில் இடம் பெற்ற தகவல்களை அடிப்படையாக வைத்து இந்த வெப்சீரிஸ் ஒளிபரப்பாகிறது. இந்த வெப் சீரிஸ் டிரைலர்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டுள்ளன. இந்த தொடர் ஜூலை 4-ந் தேதி ஒளிபரப்பாகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share