உதயச்சந்திரனுக்குப் பதிலாக வி.பி. ஜெயசீலனுக்கு கூடுதல் பொறுப்பு!

Published On:

| By Kavi

தொல்லியல் துறை இயக்குநராக வி.பி. ஜெயசீலன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து தலைமை செயலாளர் சாய் குமார் இன்று (ஜூலை 7) பிறப்பித்துள்ள உத்தரவில்,  ”இதுவரை தொல்லியல் துறை இயக்குநர் பதவியைக் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரனுக்கு பதிலாக, தற்போது சுற்றுலாத் துறை இயக்குநராகவும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் பணியாற்றி வரும்  வி.பி. ஜெயசீலனிடம்  இப்பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.
வி.பி. ஜெயசீலன்  தொல்லியல் துறை இயக்குநர் பதவியின் முழு கூடுதல் பொறுப்பையும் மறு உத்தரவு வரும் வரை வகிப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

தொல்லியல் துறைக்காக உதயச்சந்திரன் பல்வேறு நடவடிக்கைகளையும் பணிகளையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share