வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது… சற்று நேரத்தில் முன்னிலை விவரம்!

Published On:

| By Kavi

ஒட்டுமொத்த தமிழகமே எதிர்பார்த்த நாள் இன்று (மே 4).

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தலில் 85.10 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன 

ADVERTISEMENT

இது 2011 தேர்தலின் போது பதிவான மாநிலத்தின் முந்தைய அதிகபட்சமாக வாக்குப்பதிவான 78.29 சதவிகிதத்தை விட அதிகமாகும். 

இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலின் போது பதிவான வாக்குகள் எண்ணும் பணி தற்போது தொடங்கியுள்ளது. 

ADVERTISEMENT

இதற்காக மாநிலம் முழுவதும் 62 வாக்குகள் எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இது முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு சில நிமிடங்களிலேயே யார் முன்னிலை என்ற விவரங்கள் வெளியாக தொடங்கும். 

ADVERTISEMENT

வாக்கு எண்ணும் மையத்துக்குள், தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்பு பணியாளர்கள், மற்றும் வேட்பாளர்கள் முகவர்கள் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி உண்டு. 

க்யூ ஆர் கோடு முறையில் இந்த முறை வாக்குகளை எண்ணும் பணியாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தேர்தல் அதிகாரி ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளை முடிவுத்தாளில் பதிவு செய்து வெற்றியாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து அவருக்கு வெற்றி சான்றிதழை வழங்குவார். 

வாக்கு எண்ணும் பணியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையை பொருத்தவரை சுமார் 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share