2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் சற்று நேரத்தில் எண்ணப்படவுள்ளது.
இதற்கான பணிகள் தற்போது 62 வாக்கு எண்ணும் மையங்களிலும் தீவிரமாக நடந்து வருகின்றன.
சென்னை லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், தி. நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட தொகுதிகளில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியில் எண்ணப்படவுள்ளது.
ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை அறையும் சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடும் சோதனைகளுக்குப் பிறகு, வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், அனுமதியற்ற நபர்கள் நுழைவதைத் தடுக்கவும் கல்லூரி வளாகத்தைச் சுற்றி பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவு அதிரடிப் படையினர் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் களத்தில் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
