தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்னும் சற்று நேரத்தில் எண்ணப்படவுள்ளது.
இந்தநிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில், “விழிப்புடன் இருந்து, கண்காணிப்பைத் தொடருங்கள். இரவு நேரங்களில் விழித்திருங்கள். புகார்களைப் பதிவு செய்யுங்கள்” என்று தனது கட்சி முகவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அந்த பதிவில், “மின்வெட்டு திட்டமிட்டு ஏற்படுத்தப்படுவதாக பல்வேறு இடங்களிலிருந்து எனக்குத் தகவல்கள் வருகின்றன. ஸ்ரீராம்பூர், கிருஷ்ணாநகர், கொல்கத்தாவின் க்ஷுதிராம் அனுஷீலன் கேந்திரா வரை, மின்சாரம் துண்டிக்கப்படுவது, சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்படுவது மற்றும் ஸ்ட்ராங் ரூம்க்குள் வாகனங்கள் உள்ளே செல்வதும் வெளியே வருவதுமான சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இவை அனைத்தும் பாஜகவின் தூண்டுதலின் பேரில் நடைபெறுகின்றன.
எனது கட்சித் தொண்டர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். எல்லாவற்றையும் கண்காணிப்பதற்காக நான் எப்படி இரவு முழுவதும் விழித்திருக்கிறேனோ, அதேபோல் நீங்களும் இரவு முழுவதும் விழித்திருந்து, ‘ஸ்ட்ராங் ரூம்களில்’ உள்ள மக்களின் வாக்குகளைப் பாதுகாக்கவும். யாராவது எங்காவது சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையை உருவாக்கினால், அவர்களைச் சூழ்ந்து கொள்ளுங்கள், உடனடியாகப் புகார் கொடுங்கள், மேலும் சிசிடிவி காட்சிகளைக் கேட்டுப் பெறவும்” என குறிப்பிட்டுள்ளார்.










