ஆசிய விளையாட்டு போட்டிகள்: தங்கம், வெள்ளி, வெண்கலம்… சரித்திரம் படைத்த தமிழக வீராங்கனை வித்யா ராமராஜ்

Published On:

| By Mathi

Vithya Ramraj- Gold Medal

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக வீராங்கனை வித்யா ராமராஜ் தனது மூன்றாவது பதக்கத்தை வென்றுள்ளார். மகளிர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கம் வென்றதன் மூலம், இந்த ஆசிய விளையாட்டில் இந்திய தடகள அணிக்கும் முதல் தங்கம் கிடைத்துள்ளது.

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் இன்று நடைபெற்ற மகளிர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வித்யா ராமராஜ், கிரண் பஹல், மச்செட்டிரா பூவம்மா, பிராச்சி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3:29.69 நிமிடங்களில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தது.

ADVERTISEMENT

பஹ்ரைன் அணி 3:30.21 நிமிடங்களுடன் வெள்ளியும், சீனா 3:31.02 நிமிடங்களுடன் வெண்கலமும் வென்றன.

இந்தத் தங்கத்துடன் வித்யா ராமராஜ் இந்த ஆசிய விளையாட்டில் மட்டும் 3 பதக்கங்களை வென்று அசத்தி உள்ளார்.

ADVERTISEMENT

ஏற்கெனவே கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணியுடன் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் வித்யா ராமராஜ். தொடர்ந்து மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலம் வென்றார். இதன்மூலம் பி.டி.உஷாவின் 42 ஆண்டுகால 55.42 விநாடி தேசிய சாதனையையும் முறியடித்தார் வித்யா ராமராஜ்.

தற்போது மகளிர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றதன் மூலம், 2026-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்களுடன் வித்யா ராமராஜ் சரித்திரம் படைத்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share