ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் மணிவாசன் இன்று (செப்டம்பர் 29) பிறப்பித்துள்ள உத்தரவில், 

ADVERTISEMENT

”சேலம் மாநகர காவல் ஆணையர் ஜோஷி நிர்மல் குமார், சென்னை டிஜிபி அலுவலக நவீன மயமாக்கல் பிரிவு ஐஜி ஆகவும், 

சென்னை தலைமையிட கூடுதல் காவல் ஆணையர் ஏ ஜி பாபு, சேலம் மாநகர காவல் ஆணையராகவும்,

ADVERTISEMENT

சேலம் சரக டிஐஜி சந்தோஷ் ஹாதி மணி, பெருநகர சென்னை காவல் நுண்ணறிவு பிரிவு இணை ஆணையராகவும், 

சென்னை, லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குனர் தேவராணி சேலம் சரக டிஐஜியாகவும், 

ADVERTISEMENT

கோவை, பயங்கரவாத தடுப்பு படை எஸ்பி பத்ரி நாராயணன், அடையாறு துணை ஆணையராகவும், 

காத்திருப்போர் பட்டியலில் இருந்த கார்த்திகேயன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய எஸ்பி ஆகவும், 

சென்னை, போதை பொருள் நுண்ணறிவு பிரிவு (NIB CID) எஸ் பி மதிவாணன், பெருநகர சென்னை காவல், செயின்ட் தாமஸ் மவுண்ட் துணை ஆணையராகவும், 

செயின்ட் தாமஸ் மவுண்ட் துணை ஆணையர் சீனிவாசன் சென்னை, போதை பொருள் நுண்ணறிவு பிரிவு (NIB CID) எஸ் பி ஆகவும், 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய எஸ்பி ஸ்டாலின் சிபிசிஐடி தெற்கு மண்டல எஸ்பி ஆகவும், 

பெருநகர சென்னை காவல் பாதுகாப்பு பிரிவு துணை ஆணையர் சுந்தரவடிவேல், பெருநகர சென்னை காவல் நலன் மற்றும் சொத்து மேலாண்மை பிரிவு துணை ஆணையராகவும், 

வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பாஸ்கரன் சேலம் வடக்கு துணை ஆணையராகவும், 

சேலம் வடக்கு துணை ஆணையர் அங்கீத் சிங், வண்ணாரப்பேட்டை துணை ஆணையராகவும், 

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஸ்டாலின் சென்னை வடக்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாகவும் பணியிடமாற்றம் செய்யப்படுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

, 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share