ஆசிய விளையாட்டு போட்டி: வெண்கலம் வென்ற தமிழக வீரர்கள் விஷால், ராஜேஷ்; ரூ.30 லட்சம் பரிசு- முதல்வர் விஜய்

Published On:

| By Mathi

Asian Games-Tamil Nadu

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளம் ஆண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அணியில் இடம் பெற்ற தமிழ்நாட்டு வீரர்கள் ராஜேஷ் ரமேஷ், விஷால் தென்னரசு கயல்விழி ஆகியோருக்கு ரூ.30 லட்சம் ஊக்க தொகை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கை: ஜப்பான் நாட்டில் நடைபெறும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளம் ஆண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

இத்தடகள வீரர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவர்களது விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும், குழு ஒருங்கிணைப்பும் வெற்றியை நோக்கி பயணிக்கும் இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கும்.

எதிர்காலத்திலும் இத்தடகள வீரர்கள் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்! இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share