ஸ்பாவுக்குப் போறவங்க தயவுசெஞ்சு இதை பண்ணாதீங்க… நடிகை எச்சரிக்கை!

Published On:

| By Kavi

ஸ்பா மசாஜ் சென்டருக்கு போன போது, தன்னுடைய தாலி செயின் காணாமல் போய்விட்டதாக நடிகை வினோதினி புகார் தெரிவித்துள்ளார். 

80ஸ், 90ஸ் கிட்ஸ்களுக்கு நன்கு பரிச்சயமானவர் வினோதினி. வண்ண வண்ண பூக்கள் உட்பட பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து சித்தி, வாணி ராணி, அக்னி நட்சத்திரம், சீதாராமன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் சீரியல்களிலும் நடித்துள்ளார். 

ADVERTISEMENT

இந்த நிலையில் வினோதினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

“கடந்த சில நாட்களாக மெண்டல் ஸ்ட்ரஸாக இருந்தது. இதனால் சமீபத்தில் சிஐடி காலனியில் உள்ள இன்ஃப்ளுயன்ஸ் ஸ்பாவுக்கு சென்றிருந்தேன். 

ADVERTISEMENT

அங்கு மசாஜ் செய்து கொண்டிருக்கும் போது பணியில் இருந்த லேடி, உங்களுக்கு கழுத்தில் மசாஜ் செய்ய வேண்டும். தாலி செயினை கழட்டி கொடுங்கள் என்று கேட்டார். அதை வாங்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்து விட்டார். 

அதன் பிறகு நன்கு மசாஜ் செய்ததால் தூக்க நிலைக்கு சென்று விட்டேன். இதற்கிடையே என்னுடைய கணவர் வீட்டிலிருந்து ஒரு இறப்பு செய்தி வந்து விட்டது. 

ADVERTISEMENT

இதனால் செயினை எடுக்காமலேயே அங்கிருந்து கிளம்பி விட்டேன். கீழே இறங்கி வந்த போது அந்த லேடி தட்டில் செருப்பை வைத்து கொண்டு வந்து கொடுத்தார்.

ஆனால் டப்பாவில் வைத்த செயினை கொடுக்கவில்லை. 

நானும் இறப்புக்கு செல்ல வேண்டும் என்பதால் மறந்து போய் வந்து விட்டேன். 

மறுநாள் இறப்பு வீட்டில் இருந்ததால் எனக்கு தாலி செயினை கழட்டி கொடுத்த ஞாபகமும் சுத்தமாக வரவில்லை. 

அதற்கு அடுத்த நாள் தான் எனக்கு திடீரென நியாபகம் வந்து, ஓடிப்போய் கேட்டால், தாலி செயின் இல்லை. சாரி… எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். 

ஸ்பா ஓனருக்கு போன் செய்து கேட்டால், ஏன் நீங்க போன உடனே சொல்லவில்லை? அடுத்த நாளே ஏன் வரவில்லை? என்று கேள்வி எழுப்பி எங்கள் ஸ்பாவில் யாரும் திருட மாட்டார்கள் என்று சொல்லிவிட்டார். 

என் தாலியை, டப்பாவில் போட்டுவிட்டு இப்போது காணும் என்கிறார்கள். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். 

எனவே ஸ்பா, மசாஜ் சென்டர்களுக்கு போகும்போது மதிப்புமிக்க பொருளை எடுத்துச் செல்லாதீர்கள்” கூறியுள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share