நடிகர் அஜித் நடிக்கும் புதிய படத்தில் மோகன்லால் இணையவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
நடிகரும் கார் ரேஸருமான அஜித்குமார் நடிப்பில் 2025 ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. அதன்பிறகு அவர் கார் ரேஸில் கவனம் செலுத்தி வந்தார்.
இதனால் அவரது படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர்.
இந்தநிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஷாலினி தயாரிப்பில் டேர் டெவில் படத்தில் அஜித்குமார் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்த படம் எப்படி இருக்கும் என provoke awards 2026 நிகழ்ச்சியில் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். அவர் கூறுகையில், ”குட் பேட் அக்லி’ படத்துக்கு எந்த அவார்டு கிடைத்தாலும் அதை அஜித் சாருக்கு டெடிக்கேட் செய்வேன். ஏனேன்றால் அந்த படத்தின் விஷனை புரிந்து கொண்டு, முதல் நாளில் இருந்தே தன் மீது முழு நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்தவர் நடிகர் அஜித்.
அஜித் சாருடன் 73 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியது தன் வாழ்வின் சிறந்த தருணங்களில் ஒன்று. படக்குழுவினருக்கு அவர் மிகுந்த சௌகரியமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தார்.
அவரது அடுத்த திரைப்படம் முந்தைய படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட, ஆனால் குடும்பங்கள் அனைவரும் ரசிக்கும்படியான முழுமையான கமர்ஷியல் எண்டர்டெய்னர் திரைப்படமாக இருக்கும்” என்று கூறினார்.
டேர் டெவில் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் இணைந்து நடிக்க செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வருகின்றன.
முன்னதாக முதல்வர் விஜய்யின் ஜில்லா படத்தில் மோகன்லால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
