மீண்டும் திரையில் முதல்வர் விஜய் – திரிஷா : வெளியான அப்டேட்!

Published On:

| By Kavi

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பேரரசு இயக்கத்தில் முதல்வர் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் திருப்பாச்சி.

விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

அப்போதே ரூ.32 கோடி இப்படம் வசூல் செய்தது.

இப்படத்தில் இடம் பெற்ற கட்டு கட்டு, கண்ணும் கண்ணும், கும்பிட போன தெய்வம் உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன.

ADVERTISEMENT

இந்த நிலையில் திருப்பாச்சி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இதையொட்டி வெளியான போஸ்டரில், அக்டோபர் 1ஆம் தேதி திருப்பாச்சி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படும் என்றும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share