சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மகன் அமீன் ஓட்டி வந்த சொகுசு கார் விபத்தில் சிக்கியது. இதில் அமீன் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே இன்று (ஆகஸ்ட் 10) அதிகாலை போர்ஷ் காரில் அமீனும் அவரது நண்பர் பார்கவும் சென்று கொண்டிருந்தனர். அப்போது ராபிடோ வாகனத்துடன் அமீனின் கார் மோதியது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 2 வாகனங்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இந்த விபத்தில் அமீனுக்கும் அவரது நண்பருக்கும் காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதேபோல் ராபிடோ வாகனத்தில் பயணித்த பயணிக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
