விழுப்புரம் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

Villupuram Constituency Pre-Poll Survey 2026

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

விழுப்புரம் வாக்காளர்கள்

ADVERTISEMENT
Villupuram Constituency Pre-Poll Survey 2026

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

Villupuram Constituency Pre-Poll Survey 2026
Villupuram Constituency Pre-Poll Survey 2026
Villupuram Constituency Pre-Poll Survey 2026

சாதி வாரியான வாக்காளர்கள்

Villupuram Constituency Pre-Poll Survey 2026

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

Villupuram Constituency Pre-Poll Survey 2026

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

Villupuram Constituency Pre-Poll Survey 2026

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

Villupuram Constituency Pre-Poll Survey 2026

விழுப்புரம் தொகுதியை கேட்டு தேமுதிக போராடியது. ஆனால் சிட்டிங் எம்.எல்.ஏ லட்சுமணன் இதை விட்டுக்கொடுக்கவில்லை. இதை திமுக தலைமையும் ஏற்றுக்கொண்டது. இந்த தொகுதியில் 4 முறை முன்னாள் அமைச்சர் பொன்முடி வெற்றி பெற்றுள்ளார். 2021 தேர்தலில் லட்சுமணன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகத்தை 14,868 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளராக விஜயா, தவெக வேட்பாளராக மோகன்ராஜ், நாதக வேட்பாளராக அபிநயா பொன்னிவளவன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக கூட்டணி-42 %
அதிமுக கூட்டணி -37%
தவெக-16%
நாதக-4% வாக்குகள் பெறும்

விழுப்புரம் தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது. திமுக முன்னிலை வகிக்கிறது

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? விழுப்புரம் | Vilupuram | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share