தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
விக்கிரவாண்டி வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

விக்கிரவாண்டி தொகுதியை திமுக கூட்டணியில தேமுதிக கேட்டு பார்த்தது. 2021-ல் திமுகவின் புகழேந்தி வெற்றி பெற்றார். ஆனால் அவர் இறந்ததால 2024-ல் இடைத்தேர்தல் நடந்தது. அதில் திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார். பல திட்டங்களை விக்கிரவாண்டிக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.
இந்நிலையில் 2026 தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் மீண்டும் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா களம் காண்கிறார்.
இங்கே அதிமுக கூட்டணியில பாமகவின் சிவக்குமார் போட்டியிடுகிறார். தவெக சார்பில் விஜய் வடிவேல், நாதக சார்பில் சுதா சந்திரசேகரன் ஆகியோர் களம் காண்கின்றனர்
நமது சர்வே முடிவுபடி,
திமுக -41 %
அதிமுக கூட்டணி -38%
தவெக-16%
நாதக-4% வாக்குகள் பெறும்
மிக நெருக்கமான போட்டி நிலவுகிறது. மீண்டும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
