நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் 12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். Vijayalakshmi Sexual harassment case
இந்தநிலையில், இன்று (பிப்ரவரி 28) மாலை சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த சீமான், அங்கிருந்து கார் மூலம் வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார். அங்கு நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தனது மனைவி கயல்விழி வழக்கறிஞர் என்பதால் அவருடன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக சீமான் திட்டமிட்டுள்ளார். மனைவியின் வருகைக்காக சீமான், காவல் நிலையத்தில் ஆஜராகாமல் காத்திருக்கிறார்.
சீமான் காவல்நிலையம் வருவதற்கு முன்பாகவே வளசரவாக்கம் காவல் நிலையத்தில் குவிந்த நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. Vijayalakshmi Sexual harassment case