2029-ல் பிரதமர் யார்? தீர்மானிக்க போவது விஜய்.. ஆஸ்தான ஜோதிடர் ரதன் பண்டிட் வெற்றிவேல்

Published On:

| By Mathi

Vijay will decide who the PM in 2029: Astrologer Rathan Pandit Vetrivel

2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது நாட்டின் பிரதமரை தமிழக முதல்வர் விஜய்தான் தீர்மானிப்பார் என்று அவரது ஆஸ்தான ஜோதிடர் ரதன் பண்டிட் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

கலாட்டா ஊடகத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ரதன் பண்டிட் வெற்றிவேல் பேசியதாவது:

ADVERTISEMENT

விஜய் கடக லக்னம் கடக ராசி. மோடி விருச்சிக லக்னம் விருச்சிக ராசி. ரெண்டு பேர் ஜாதகத்துலயும் லக்னத்துல சந்திரன் செவ்வாய் – சந்திர மங்கள யோகம்.. ஒரே மாதிரி உள்ள இரண்டு நபர்கள். ஒரே மாதிரி கேரக்டர், பாடி லாங்குவேஜ்.

இப்ப நிறையபேர் விஜய் சார் பிரஸ்ஸை பார்க்கிறது இல்லைங்கிறாங்க..

ADVERTISEMENT

இப்போ உதாரணத்துக்கு பிரைம் மினிஸ்டரும் பிரஸ்ஸை பார்க்கிறது இல்லை.. ஏன் ஜெயலலிதா அம்மாவும் அதிகமா பிரஸ்ஸை பார்க்கிறது இல்லை.. அதுக்குள்ள போக வேண்டாம்

மோடி, 75 வயது கடந்து வாழ்ந்துட்டு இருக்காரு, நாங்க (விஜய்) ஜஸ்ட் 50 வயது கடந்து வந்திருக்கோம். இப்போ எனக்கு தெரிஞ்சு வரைக்கும் பிரைமினிஸ்டருக்கு இவரை பிடிக்கும். இவங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு வார் வரதுக்கு வாய்ப்பில்லை.

ADVERTISEMENT

இப்ப எதிர்காலத்துல தலைவர்னு உருவாவாங்க இல்லையா? இப்ப 60’ஸ் தலைவர்கள் 70’ஸ்-ல் இல்லாம போயிருப்பாங்க.. அப்படி வரும்பொழுது எதிர்கால தலைவர் லிஸ்டில எங்க தலைவர் (விஜய்) வந்துறாரு. பிரைமினிஸ்டரோட பிளெஸ்சிங்ஸ் கண்டிப்பா எங்க தலைவருக்கு இருக்கும். எங்க தலைவர் யாரு பிரைமினிஸ்டர்ங்கிறதை டிசைட் பண்ற இடத்துலதான் இருப்பாருன்னு நினைக்கிறேன்..

2029 ஆன்வர்ட்ஸ் ரெஸ்ட் ஆஃப் அவர் லைஃப். இந்தியாவினுடைய தலைவிதி எங்க தலைவரோட கனெக்டடாவே (விஜய் இருக்கும்.) அதற்கான தகுதியும் வல்லமையும் கடவுள் எங்க தலைவருக்கு கொடுத்துள்ளார்.

ஜெயலலிதா அம்மா இருக்காங்களே, அப்படியே விஜய் சார்..

ஜெயலலிதா அம்மா, ஒருத்தரை நம்பிட்டா, மறுபடியும் அவங்களை சந்தேகப்பட மாட்டாங்க. ஒரு பிரெண்ட்ஷிப்ப கிரியேட் பண்ணிட்டாங்கன்னா, ரெஸ்ட் ஆஃப் ஹர் லைஃப் இட் கேன் கண்டினியூ. குறைகள் வந்துட்டா கூட திருத்திடுவாங்க.. வேண்டாம்னு நினைக்க மாட்டாங்க..

ஜெயலலிதா எப்படிப்பட்டவங்கன்னா, நட்பு வட்டத்துல நான் இருந்திருக்கேன், ”சோ” இருந்திருக்காரு, நானும் அவங்களும் ரொம்ப க்ளோஸ். சின்னம்மா சசிகலாவா இருக்கட்டும், அப் டு தி எண்ட் அவங்க எப்படி டிராவல் பண்ணாங்கன்னு பாருங்க.

ஜெயலலிதா அம்மா நம்புனவங்களை சந்தேகப்படமாட்டாங்க.. சந்தேகப்படுறவங்களை நம்பமாட்டாங்க..

எங்க தலைவரும் (விஜய்) அதுதான்.. ஒரு குறிப்பிட்ட நட்பு வட்டத்தை ஜெனரேட் பண்ணிட்டாருன்னா அதுக்குள்ள போறது கஷ்டம், போயிட்டா லைஃப் லாங் வி ஆர் சேஃப்.

ரொம்ப ரொம்ப நம்பக் கூடிய மனிதர்.. இன்னொரு பாயிண்ட் ரெண்டு பேருமே கிரேட் பெர்ஃபார்மன்ஸ். காலை 9:00 மணிக்கு கிளம்பிய செக்ரெட்டரியேட்ல இருந்துட்டு சாயந்திரம் 5:30 வரைக்கும் எங்க தலைவர் வேலை செய்றாரு. இதே ட்ரெண்டுதான் ஜெயலலிதா அம்மாவும். ஜெயலலிதா செக்கரெட்டேரியட்ல ஜெயலலிதா கொஞ்சமா வேலை செய்வாங்க.. எங்க தலைவர் அதிகமா வேலை செய்வாரு..

ஒரு துளிகூட பொறாமைப்படாத.. பொறாமைன்னா என்னான்னே தெரியாதவங்க அவங்க.. யாரைப் பார்த்தும் பொறாமைப்படமாட்டாங்க.. இவங்களுக்கு கீழே தலைவர்கள் நல்லா உருவாவாங்க.. 2-ம் கட்ட தலைவர்கள் நல்லா உருவாவாங்க.. அதிமுகவில அப்படி உருவாகாமல் போனதுக்கு வேற காரணம்.. ஆனால் தவெகவில் அப்படி இல்லை.. எக்சல்ண்ட் பீப்பிள் வருவாங்க..

தலைவர் அப்படியே எம்ஜிஆர் மாதிரி, பாடி லாங்குவேஜ் எல்லாமே அப்படியே எம்ஜிஆர் மாதிரி. ஹி கேன் பி நெக்ஸ்ட் எம்ஜிஆர்… பெட்டர் தேன் எம்ஜிஆர் கூட சொல்லிருக்கேன். இப்ப அதைத்தான் ப்ரூவ் பண்ணிட்டார்

பூத்துல ஏஜென்ட் இல்ல, எம்எல்ஏ பேர் தெரியுமான்னு கேட்டாங்க; இதெல்லாம் தெரியாமலேயே ஜெயிச்சிட்டோமா இல்லையா? டிஎம்கேவில கேட்கிறாங்க இல்லை.. உங்களுக்கு பூத் ஏஜெண்ட் இல்லை.. உங்க எம்.எல்.ஏ. பேரு தெரியுமான்னு கேட்கிறாங்க.. சரி தெரியாதுன்னு வெச்சுக்கன்னு சொன்னாரு.. என் முகம் போதும்னு தானே சொன்னார்? திருச்சிக்கு நான்தான் கேண்டிடேட், மதுரைக்கு நான்தான் கேண்டிடேட், கோயம்புத்தூர் நான்தான் கேண்டிடேட்னு சொன்னாங்க. ஜனங்க ஓட்டு போட்டாங்களா இல்லையா? இதுதான் தலைவர். இவரு இன்னொரு எம்ஜிஆர்.

இவர்தான் இன்னொரு எம்ஜிஆர், திஸ் இஸ் தி ரியல் காரிஸ்மேட்டிக் லீடர்.. இந்த லீடர் கூட இன்னொரு லீடரை எங்கே போய் கம்பேர் பண்றது? ஜெயலலிதாவை அவங்க கேரியரில் யார் கூடவும் நாம கம்பேர் பண்ண முடியாது.

ஜெயலலிதாவுக்கும் கலைஞருக்கும் இருந்த வார் எப்படின்னு கேட்டீங்கனா, அதிர்ஷ்டம் ஈகுவல். எம்ஜிஆருக்கு இருந்த அதிர்ஷ்டம் வேற லெவல்.. அவரு கடவுள் மாதிரி.. கடவுள் மாதிரி வாழ்ந்த மனிதர்கள் இருக்கிறாங்க.. புத்தர் வாழ்ந்த மனிதர்.. முருகர் வாழ்ந்த மனிதர்.. ஒரு காலத்தில் இவர்களை எல்லாம் கடவுளாகவே போற்றினாலும் ஆச்சரியமில்லை. அந்த மாதிரி வாழ்ந்து காட்டிட்டா வேலை முடிஞ்சிருச்சு.

சகல சக்தியும் கொண்ட எங்க தலைவர் இன்னமும் தர்மமா வாழ்ந்துட்டா அவரை நினைச்சாலே ஜெயிச்சுடுவோம்.. தலைவரை அதிகமாக நினைக்கிறவன் தலைவர் மாதிரியே ஜெயிச்சுடுவான்னு சொல்றேன். இருவருமே தன்னலம் இல்லாத அருமையான ஆட்கள். இவ்வாறு ரதன் பண்டிட் வெற்றிவேல் தெரிவித்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share